விஜய், அஜித் ஓரம்போ.. 7 மணி நேரத்தில் பாகுபலி ட்ரெய்லர் செய்த பிரம்மாண்ட சாதனை

Bookmark and Share

விஜய், அஜித் ஓரம்போ.. 7 மணி நேரத்தில் பாகுபலி ட்ரெய்லர் செய்த பிரம்மாண்ட சாதனை

S.S.ராஜமௌலியின் பாகுபலி இரண்டாவது பாகம் ட்ரைலர் இன்று வெளியாகி பிரமாண்ட வரவேற்பை பெற்று வருகிறது. மாலை 5 மணிக்கு வெளியாவதாக இருந்த ட்ரைலர் காலையிலேயே வெளியானதால் அதிர்ச்சியான படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டது.

வெளியான 7 மணி நேரத்தில் இந்த ட்ரைலரை 10 மில்லியன் (ஒரு கோடி) பேர் பார்த்துள்ளனர். 24 மணி நேரத்தில் குறைந்தபட்சம் 30 மில்லியன் ஹிட்ஸ் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அந்த விடியோவுக்கான லைக் 4 லட்சத்தை நெருங்கி வருகிறது.

ரஜினியின் கபாலி பட டீஸர் முதல் நாளில் 5 மில்லியன் பார்வைகள் மட்டுமே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ட்ரைலர் எப்படி லீக் ஆனது என இயக்குனர் ராஜமௌலி தற்போது விசாரனை நடத்தி வருகிறார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions