பாகுபலி 2 பிரம்மாண்ட சாதனை! ட்ரைலர் ஸ்பெஷல்

Bookmark and Share

பாகுபலி 2 பிரம்மாண்ட சாதனை! ட்ரைலர் ஸ்பெஷல்

பாகுபலி ரசிகர்களை எல்லாம் தூங்க முடியாமல் செய்துள்ளது. ஏற்கனவே வந்த பாகுபலி முதல் பாகம் கேள்வியை வைத்து சென்றது. விடையை தெரிந்து கொள்ளும் நாள் நெருங்கிவிட்டது.

இந்நிலையில் நேற்று பாகுபலி 2 ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளிலும் வெளியிட்டு ரசிகர்களை கட்டிப்போட்டுவிட்டார் ராஜமௌலி.

இணையதளம் முழுக்க பாகுபலி பற்றிய பதிவுகள் தான் அதிகம் என்றே சொல்லலாம். டரைலர் வெளியான 24 மணிநேரத்தில் 5 கோடி பார்வைகளை தாண்டியுள்ளது.

உலக அளவில் ஒப்பிடும் போது 24 மணிநேரத்தில் அதிகம் பார்க்கப்பட்ட வீடியோக்களில் இதன் தெலுங்கு வெர்சன் 22 மில்லியன் பார்வைகளை பெற்று 23 வது இடத்தை பிடித்துள்ளது.மற்ற மொழிகளையும் கணக்கி கொண்டால் பாகுபலி 2 ட்ரைலர் முதல் 10 இடங்களுக்குள் வந்துவிடும்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions