ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்

Bookmark and Share

ரன்பிர்சிங்கை என் மகளுக்கு மிகவும் பிடிக்கும்: ஐஸ்வர்யாராய்

ரன்பிர் சிங்- ஐஸ்வர்யா ராய் இருவரும் கரண்ஜோகர் இயக்கிய ‘ஏ தில் ஹை முஸ்க்’ படத்தில் மிகவும் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள். இது அமிதாப்பச்சன் குடும்பத்துக்கு பிடிக்கவில்லை. இவர்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகளை அந்த படத்தில் இருந்து நீக்க முயற்சி நடந்தது. இந்த படத்தில் நடித்ததால் ஐஸ்வர்யா ராய்க்கும், அமிதாப் குடும்பத்துக்கும் மோதல் என்றெல்லாம் இந்தி படஉலகில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதுபற்றி விதம் விதமான செய்திகள் வெளியாகின. இணைய தளங்களிலும், டி.வி.களிலும் காரசார விவாதங்கள் நடந்தன. இதன் பிறகும் ஐஸ்வர்யாராயும் ரன்பிர்சிங்கும் சேர்ந்து பிலிம்பேர் பத்திரிகைக்கு நெருக்கமாக போஸ் கொடுத்து இருக்கிறார்கள்.

இதற்கிடையே இதற்கும் ஒருபடி மேலே சென்று ஐஸ்வர்யாராய் அளித்துள்ள பேட்டி இது.... ‘‘ஒருநாள் ரன்பிர் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அபிஷேக் பச்சனிடம் இருப்பது போன்ற சட்டையும், தொப்பியும் அணிந்திருந்தார். அப்போது எனது மகள் ஆரத்யா தனது அப்பா என்று நினைத்து அவரை கட்டிப்பிடித்தார்.

ரன்பிருக்கும் அபிஷேக் போன்று லேசான தாடி வேறு இருந்தது. பின்னர் தவறாக கட்டிப் பிடித்ததை அறிந்து ஆரத்யா சிரித்தாள். அவளுக்கு ரன்பிர் என்றால் மிகவும் பிடிக்கும்’’.

இந்த பேட்டி என்ன புயலை கிளப்ப போகிறதோ?


Post your comment





Related News
துபாய் ஓட்டலில் ஹீரோவிடம் கெஞ்சிய நடிகை
ஹோட்டல் அறை முன் பிரபல நடிகரிடம் கெஞ்சிய நடிகை- நடந்தது என்ன?
ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
நான் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா, என் பழைய காதல் கதைகள் வேண்டாம்- கெஞ்சும் நாயகி
ஏ தில் ஹை முஷ்கில் படம் திரையிட்ட தியேட்டர் மீது கல்வீச்சு: 5 பேர் கைது
ரன்பீர்-ஐஸ்வர்யா புகைப்படத்தால் வெளியான சர்ச்சை?
ஒலிம்பிக் போட்டியில் கபடி இடம் பிடிக்கும்: அபிஷேக்பச்சன் நம்பிக்கை
கதாபாத்திரத்திற்கு உடனடியாக மாறுவது கடினம்-ரன்பீர்!
திரையுலகில் 46 ஆண்டுகள் நிறைவு செய்த சூப்பர் ஸ்டார்
நானும் ரன்பீரும் நல்ல நட்புடன் பழகுகிறோம்-கத்ரீனா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions