திருடன் வேடத்தில் நடிக்கும் 6.3 வில்லன் ராண்டில்யா!

Bookmark and Share

திருடன் வேடத்தில் நடிக்கும் 6.3 வில்லன் ராண்டில்யா!

விஜயசேதுபதி-கிருஷ்ணா இணைந்து நடித்த படம் வன்மம். ஜெய்கிருஷ்ணா இயக்கிய இந்த படத்தில் சுனைனா நாயகியாக நடித்திருந்தவர்.

இப்படத்தில் படம் முழுக்க விஜயசேதுபதியுடன் வரும் ஒரு கேரக்டரில் நடித்தவர் ராண்டில்யா. அதையடுத்து, தற்போது மையம் என்ற படத்தில் ஒரு திருடன் வேடத்தில் நடித்திருக்கும் ராண்டில்யா, சராசரி உயரத்தை விட அதிகமாக அதாவது 6.3 உயரம் கொண்டவர்.

அதனால் தற்போது மேலும் சில படங்களில் வில்லன் வேடங்களில் நடிக்க கமிட்டாகிக்கொண்டிருக்கிறார்.

இதுகுறித்து ராண்டில்யா கூறுகையில், சினிமாவில் வில்லனாகத்தான் நடிக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல.

ஆனால் எனது உயரம், தோற்றம் என்னை வில்லனாக்கியிருக்கிறது. அதனால் வெயிட்டான வில்லனாக சினிமாவில் இடம் பிடிக்க வேண்டும் என்ற முயற்சியில் தற்போது ஈடுபட்டிருக்கிறேன்.

இதுதவிர, ராசாமதி, பாலாஜி, வெங்கட் உள்பட சில கேமராமேன்களிடம் உதவி கேமராமேனாக ஒர்க் பண்ணியிருக்கிறேன். அதோடு, விளம்பர படங்களுக்கு நானே கேமராமேனாகவும் வேலை செய்திருக்கிறேன்.

அதனால் அடுத்தபடியாக ஒரு படத்தில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற தயாராகிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் ராண்டில்யாவுக்கு சினிமாவில் நடிப்பு, ஒளிப்பதிவு என இரண்டு துறைகளிலும் புகழ் பெற வேண்டும் என்பதுதான் விருப்பமாம்.

அதேசமயம், இந்த இரண்டில் எந்த துறை எனக்கு முதலில் பெரிய அளவில் வெற்றியை கொடுக்கிறதோ அந்த துறையில் அதன்பிறகு முழுகவனத்தையும் செலுத்துவேன் என்கிறார் ராண்டில்யா.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions