தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா?: நடிகை ரஞ்சனி

Bookmark and Share

தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா?: நடிகை ரஞ்சனி

தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன் என்று நடிகை ரஞ்சனி ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மக்கள் சசிகலாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ரஞ்சனி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் சசிகலா பற்றி கூறியிருப்பதாவது,தமிழ்நாட்டு மக்களுக்காக நான் குரல் கொடுக்கிறேன்.

அது எப்படி சசிகலாவை போய் முதல்வராக ஏற்பது? அம்மாவின் பணிப்பெண் என்பதை தவிர சசிகலாவுக்கு என்ன தகுதி உள்ளது...தமிழக மக்களை முட்டாள் என்று மன்னார்குடி மாபியா நினைக்கிறதா? இந்த அராஜகத்தை எதிர்த்து குரல் கொடுக்குமாறு தமிழக மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஜல்லிக்கட்டு விஷயத்தில் இளைஞர்களின் சக்தியை உலகம் பார்த்துள்ளது.தற்போது இந்த முட்டாள்தனத்தை மக்கள் சக்தி தூக்கி எறிவதை பார்க்க விரும்புகிறேன். அதிமுகவை நடிகரும், முதல்வருமான மறைந்த எம்.ஜி.ஆர். துவங்கினார்.

அவர் இறந்த பிறகு அன்புக்குரிய அம்மா அவர்கள் பொறுப்பேற்றார்கள்.கிரிமினல் சசிகலா முதல்வராவதை தமிழ் மக்கள் தயவு செய்து தடுத்து, அதிமுகவை காப்பாற்ற வேண்டும். முக்கிய பதவிக்கு வருபவர்களுக்கு நல்ல தகுதி மற்றும் அனுபவம் இருக்க வேண்டும்.

முதல்வராக இன்னும் அதிகமாக தேவை...அம்மாவின் கடைசி நாட்களின்போது அனைவரையும் சசிகலா எப்படி தடுத்தார் என்பதை மக்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.தமிழகத்தை கடவுள் காக்க வேண்டும்.

இந்த ஆட்சி கவிழ்ப்பு குறித்து ஜனாபதி பிரணாப் முகர்ஜி உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறேன் என ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஜல்லிக்கட்டுக்கு போராடினீங்க, சித்தப்பா அரசுக்கு எதிராக எதுவும் இல்லையா?: நடிகை ரஞ்சனி
சிவரஞ்சனி மகனை அறிமுகம் செய்யும் நாகர்ஜுனா
மனைவி கர்ப்பம் தந்தையாகப்போகும் மகிழ்ச்சியில் - நடிகர் கார்த்தி!
கார்த்திக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!
தமிழ் முறைப்படி நடந்தது நடிகர் கார்த்தி - ரஞ்சனி திருமணம்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions