தெருநாய்க்காக டாக்டருடன் சண்டைபோட்ட நடிகை..!

Bookmark and Share

தெருநாய்க்காக டாக்டருடன் சண்டைபோட்ட நடிகை..!

மலையாளத்தில் சின்னத்திரை தொகுப்பாளராக பணிபுரிபவர் ரஞ்சனி ஹரிதாஸ். ஒரு சில படங்களிலும் நடித்திருக்கும் இவர், மாடலிங்கிலும் கால் பதித்துள்ளவர்.

அதுமட்டுமல்ல, சர்ச்சைகளுக்கும் என்றுமே பஞ்சம் இல்லாதவர். மேலும் பிராணிகள் மீது அளவற்ற பிரியம் கொண்டவர். சமீபத்தில் ஒரு கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட இவர், டாக்டர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கியதாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இது நடந்தது தெருநாய்கள் பாதுகாப்பு பற்றி பஞ்சாயத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் என்பது தான் ஆச்சர்யம் தருகிறது. பின்னே, பஞ்சாயத்து கூட்டங்களில் கட்சிக்காரர்கள் தானே மைக்கை பிடுங்குவார்கள்.

வேறொன்றுமில்லை, கூட்டத்தில் முதல் ஆளாக பேசிய கால்நடை மருத்துவர், ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள தெருநாய்களை, குறிப்பாக ஒரு தெருவில் ஒரு நாய் பாதிக்கப்பட்டிருந்தால் கூட அந்த தெருவில் உள்ள எல்லா நாய்களையும் கொன்றுவிடவேண்டும் என கூறினாராம். இதனால் கோபமான ரஞ்சனி, வேகமாக சென்று மைக்கை பிடுங்கியதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ரஞ்சனியோ, தான் மைக்கை பிடுங்கவில்லை என்றும் பஞ்சாயத்து தலைவர் தன்னிடம் மைக்கை கொடுத்தபின் தான் வாங்கினேனன் என்றும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்ல, அன்று எடுக்கப்பட்ட வீடியோவை பார்த்தாலே உண்மை தெரியும் என்றும், ஒரு கால்நடை மருத்துவர் பிராணிகளை காப்பாற்றுவதை விட்டு, அவரது தொழில் தர்மத்தையும் சட்டத்தையும் மீறி அவ்வாறு பேசியதால் அவருக்கு பதிலளிக்கும் விதமாக பேசியதாகவும் கூறியுள்ளார்.. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions