தமிழர் கலாச்சார பண்பாட்டு முறைகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்: நடிகர் ரஞ்சித் பேச்சு

Bookmark and Share

தமிழர் கலாச்சார பண்பாட்டு முறைகளை மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும்: நடிகர் ரஞ்சித் பேச்சு

பல்லடம் புரபசல் பொறியியல் கல்லூரி 5–ம் ஆண்டு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அறக்கட்டளை பொருளாளர் யுவராஜா முன்னிலை வகித்தார். கல்லூரி செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். கல்லூரி இயக்குநர் சந்திரமோகன் ஆண்டறிக்கை வாசித்தார்.

விழாவில் படிப்பு மற்றும் விளையாட்டு, கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி திரைப்பட நடிகர் ரஞ்சித் பேசியது:–

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தமிழ் மொழியை கட்டாயப் பாடமாக்கிட சட்டம் இயற்ற வேண்டும். அதே சமயம் உலக தொடர்பு மொழியான ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட பிராந்திய மொழிகளுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கல்லூரிகளில் ஒழுக்கம், தமிழர் கலாச்சார பண்பாட்டு முறைகளை சொல்லி தரும் வகையில் பண்பாட்டு கல்வி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

நான் கல்லூரிகளில் படிக்கும்போது எந்த நெருக்கடியும், கட்டாயமும் இல்லாமல் படித்தேன். ஆனால் இன்று பொருளாதார வளர்ச்சி, ஆடம்பர தேவை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கல்வி வியாபார நோக்கத்துடன் படிக்க வேண்டியதுள்ளது. உலகில் எளிதான வேலை எது என்றால் கல்வி கற்பது தான். கற்க வேண்டிய காலத்தில் படிக்காமல் விட்டு விட்டு பின்னர் கஷ்டப்படும் போது அப்போது படித்து இருக்காலாமே என்று எண்ண தோன்றும். ஆனால் அப்போது குடும்ப சூழல், பண தேவை ஆகிய காரணங்களால் நம்மால் படிக்க முடியாது.

சமுதாயத்தில் நல்ல அங்கீகாரம் பெற வேண்டுமால் உயர் கல்வி கற்று உயர் வாழ்க்கை வாழ்வது தான். திரைப்படத்துறை என்பது அது ஒரு கனவு தொழிற்சாலை. ஒரு சிலருக்கு யோகம் இருந்தால் உயர்ந்த இடத்திற்கு வர முடியும். இல்லாவிட்டால் காணாமல் போயிவிடுவார்கள். அன்பை யார் வேண்டுமானாலும் ஊட்டலாம், அறிவை ஊட்ட முடியாது. கல்வி எப்போதும் அழிவதில்லை என்றார்.

முடிவில் கல்லூரி முதல்வர் சந்திரசேகர் நன்றி கூறினார்.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions