அறக்கட்டளை தொடங்கினார் இயக்குநர் ரஞ்சித்

Bookmark and Share

அறக்கட்டளை தொடங்கினார் இயக்குநர் ரஞ்சித்

அட்டக்கத்தி படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த பா.ரஞ்சித், அடுத்து இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முக்கிய  இயக்குனர் ஆனார். அவர் தற்போது நீலம் என்ற அறக்கட்டளையை தொடங்கி உள்ளார்.

திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாத சிறுவர்களுக்காக இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். முதல்கட்டமாக சென்னை வியாசர்பாடியில் இதை தொடங்கிய அவர் அங்குள்ள ஏழை சிறுவர்களுக்கு ஓவியம், நடனம், நாடகம், கராத்தே, குங்பூ பயிற்சிகள் கொடுத்தார்.

தற்போது 100 சிறுவர் சிறுமிகள் இதில் பயிற்சி பெற்று வருகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பயிற்சியாளரை நியமித்திருக்கிறார். சிறுவர் சிறுமிகளிடம் எந்த திறமை இருக்கிறதோ அதை ஊக்குவித்து பயிற்சி கொடுத்து பெரிய இடத்துக்கு கொண்டு செல்வதுதான் இந்த அறக்கட்டளையின் நோக்கம்.

10 முதல் 15 வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு பிடித்த பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம். சென்னை புறநகரான கரலபாக்கத்தில் 40 குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறார். இதை தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்பதே ரஞ்சித்தின் திட்டம். இதற்கு அவரது நண்பர்கள் பலரும் உதவுகிறார்கள்.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions