புதுப்படத்தில் ரஜினியின் கெட்டப் குறித்து மனம் திறந்த ரஞ்சித்

Bookmark and Share

புதுப்படத்தில் ரஜினியின் கெட்டப் குறித்து மனம் திறந்த ரஞ்சித்

ரஜினி, ‘லிங்கா’ படம் ரிலீசுக்கு பிறகு சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். அப்போது அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. பலரிடம் கதைகளும் கேட்டு உள்ளார். இறுதியில் ரஞ்சித் சொன் னதை பிடித்தது. அவர் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். 

ரஞ்சித் ‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ படங்களை இயக்கி பிரபலமானவர். முன்னணி டைரக்டர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இந்த படத்தின் கதை பற்றி பல்வேறு யூகங்கள் பரவி உள்ளன. 

நிழல் உலக தாதாக்கள் பற்றிய கதை என்றும், ரஜினி வெள்ளை தாடியுடன் தாதா கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரஜினி ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இவர் ஏற்கனவே ‘தோனி’, ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்துள்ளார். 

இந்த நிலையில் இப்படத்தில் ரஜினி நடிக்க உள்ள கெட்டப் பற்றிய தகவலை இயக்குனர் ரஞ்சித் வெளியிட்டு உள்ளார். அவர் கூறும்போது, நான் இயக்கிய ‘மெட்ராஸ்’ படம் ரஜினிக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த படத்தின் பாத்திரங்கள் யதார்த்தமாக இருந்ததாக பாராட்டினார். தனது படத்தில் உள்ள கேரக்டர்களும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்று கூறினார். 

ரஜினியை வைத்து நான் இயக்கும் படத்தில் அவரை ‘முள்ளும் மலரும்’ படத்தில் வரும் காளி கதாபாத்திரம் போல பார்க்கலாம் என்றார். இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
முக்கிய இடம் பிடித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் காலா! ரசிகர்கள் கொண்டாட்டம்
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions