
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கபாலி’. சென்னையில் தொடங்கிய முதற்கட்ட படப்பிடிப்பைத் தொடர்ந்து மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெற்றது.
நீண்ட நாட்கள் மலேசியாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த படப்பிடிப்பு, அதனைத் தொடர்ந்து பாங்காக்கில் நடைபெற்றது. அப்படப்பிடிப்புகளைத் தொடர்ந்து சென்னையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.
‘கபாலி’ கதையமைப்பின் படி வெளிநாட்டு வில்லன் ஒருவர் முக்கிய வேடத்தில் நடிக்க வேண்டும். அந்த வேடத்துக்கு பொருத்தமான ஆள் யார் என்று தீவிரமாக தேடி வந்தது படக்குழு.
இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக ஜெட்லீ ஒப்பந்தமாகி இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனை ட்விட்டர் தளத்தில் இயக்குநர் ரஞ்சித் மேற்கோள் காட்டி கேள்வி எழுப்பினார்கள். அதற்கு “மன்னிக்கவும். இச்செய்தியில் உண்மையில் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.
Post your comment
Related News | |
![]() |