அட்டகத்தி ரஞ்சித் நான் இல்லை டைரக்டர் பா.ரஞ்சித்குமார் !

Bookmark and Share

அட்டகத்தி ரஞ்சித் நான் இல்லை டைரக்டர் பா.ரஞ்சித்குமார் !

அட்டகத்தி படத்தை பா.ரஞ்சித் இயக்கி வந்த நேரத்தில், மண்வாசம் என்ற படத்தை பா.ரஞ்சித்குமார் என்ற இயக்குனரும் இயக்கி வந்தார். அதையடுத்து மண்டோதரி என்ற படத்தில் நாயகனாக நடித்த அவர், இப்போது பேய் இருக்கா இல்லையா என்ற படத்தை இயக்கி வருகிறார். இதற்கடுத்து தனி ஆளு என்றொரு படத்தில் நாயகனாகவும் நடிக்க தயாராகிவிட்ட்டார்.

இந்த நிலையில், கபாலி படத்தை ரஞ்சித் இயக்குவதாக செய்திகள் வெளியானதில் இருந்து, டைரக்டர் பா.ரஞ்சித்குமார் என்ற பெயரில் இருக்கும் இவரது பேஸ்புக்கிற்கு சென்று வாழ்த்து சொல்லும் ரசிகர்கள், ரஜினி படம் குறித்த தகவல்களையும் கேட்கிறார்களாம். 

ஆனால், ரஜினி படத்தை இயக்குபவர் பா.ரஞ்சித், ஆனால் நான் பா.ரஞ்சித்குமார் என்று இவர் தெரிவித்தபோதும், அதை கண்டுகொள்ளாத ரசிகர்கள், தொடர்ந்து அவரது பேஸ்புக்கிற்குள் சென்று வாழ்த்து, பாராட்டுக்களை சொல்லிக்கொண்டேயிருக்கிறார்களாம்.

அதனால், ஒரே பெயரில் இரண்டு இயக்குனர்கள் இருந்தால் இதுபோன்ற குழப்பங்கள் நீடிக்கும் என்பதால், தற்போது தான் இயக்கி வரும் பேய் இருக்கா இல்லையா படத்திலிருந்து தனது பெயரை ரஞ்சித் பாரிஜாதம் என்று மாற்றியிருக்கிறார். அதோடு புதிய பெயரில் அவர் பேஸ்புக்கில் இணைந்துள்ளார்.

 


Post your comment





Related News
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
ரஜினியின் அடுத்த படம் மீண்டும் இவருடன்தானா..?
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
தெலுங்கில் பிசியாக இருக்கும் நந்திதா
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
பா.ரஞ்சித்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் இன்றைய நிலை என்ன தெரியுமா?
ரஜினி பற்றிய லேட்டஸ்ட் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல இயக்குனர்
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
ரஜினிக்கு கைக்கொடுக்குமா அவரது மெகா ஹிட் படம்- அது என்னவென்று தெரியுமா
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions