ரஜினியைத் தாங்குவாரா ரஞ்சித்?

Bookmark and Share

ரஜினியைத் தாங்குவாரா ரஞ்சித்?

ரஜினியின் அடுத்தபடம் பற்றிய கேள்வி எப்போதும் மில்லியன் டாலர் கேள்வி போலவே இருக்கும். பல இயக்குநர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும் .காரணப் பொருத்தம் கருதி சாத்தியமாகும் விஷயங்கள் எல்லாம் கணக்கிடப்பட்டு யாருக்கு இயக்குநராகும் வாய்ப்பு அதிகம்  என்று கணிக்கப்படும்.

அப்படித்தான் ரஜினியின் அடுத்தபடத்தை இயக்குவது யார் என்று கேள்வி வந்த போது கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி. என்று பலரும் விவாதிக்கப்பட்டனர். காஞ்சனா-2 ராகவா லாரன்ஸ் வரை  இந்தப்பட்டியலில் விடவில்லை. ரஜினி ஒரு இயக்குநரைப் பாராட்டி விட்டாலே அடுத்த படம் இயக்க வாய்ப்பு கொடுப்பதாக பேசிவிட முடியுமா? ஆனால் பேசினார்கள்.

திடுதிப்பென இவர்களில் நுழைந்தவர் பா.ரஞ்சித். இப்போது அவர்தான் இயக்குவது என்று உறுதியாகி விட்டது.அட்டகத்தி ரஞ்சித் இயக்குவது என்று பேசப்பட்டதுமே செய்திகள் இப்படி சிறகடிக்க ஆரம்பித்தன. ரஞ்சித் வெகு இலகுவாக சென்னை புறநகர் மக்களின் கதையை அட்டகத்தி யாக எடுத்திருக்கிறார். எல்லாமே புதுமுகங்கள் அதே போல  மெட்ராஸ் கூட பெரிய பிரமாண்டமான படமோ, சீரியஸான படமோ இல்லை, சராசரிப்படம்தான்.

அப்படிப்பட்டவருக்கு ரஜினி படவாய்ப்பு வந்து இருக்கிறதா? தாங்குவாரா?, நட்சத்திரங்களை வேலைவாங்கிய அனுபவம் இல்லாதவர் அவர். பெரிய அனுபவம் இல்லாத ரஞ்சித் என்பவர் ரஜினி என்கிற சிங்கத்தையும் அவர் தொடர்பான நட்சத்திரப் பட்டாளங்களை எப்படி மேய்க்கப் போகிறார்?

யதார்த்தம் என்கிற பெயரில் தன் முந்தைய இரண்டு படங்களைப் போல ஒப்பனை அலங்காரம் இல்லாமல் மங்கிய ஒளியில் எடுத்தவர், மாஸ் ஹீராவான ரஜினியை  எப்படிப் பிரகாசமாகக் காட்டப் போகிறார்? ரஜினியின் தீவிர ரசிகர்களுக்கு எப்படி தீனி போடுவார்? என்றெல்லாம் பட்டி மன்றம் நடத்தாத குறையாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ரஜினியை யாரும் ஏமாற்றிவிட முடியாது.

 எனவே ஹேஷ்யங்கள் - ஊகங்கள் எழுப்புகிறவர்கள் ஒன்று செய்தால் போதும் படம் வரும் வரை பொறுமையாக இருக்க வேண்டும், அதைச் செய்தால் போதும் என்கிறார்கள் நடுநிலை மனிதர்கள்.


Post your comment





Related News
'கரிகாலன்' பெயர் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் வைத்துள்ளோம்! - பா ரஞ்சித்
ரஜினி பற்றி எல்லாம் தெரிந்தும் பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு ரஞ்சித் அடம்
ரஜினி, ரஞ்சித்தின் படம் எப்போது தொடங்குகிறது- தனுஷ் பதில்
கபாலி படம் யு சான்றிதழுடன் ஜூலையில் ரிலீஸ்!
பா.ரஞ்சித் குழுவினர் ரஜினி உடன் சந்திப்பு!
ரஜினிக்காக 3 ஹீரோ கதையை சிங்கிள் ஹீரோ கதையாக மாற்றும் ரஞ்சித்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions