செல்பி படுத்தும் பாடு... ஆபரேஷனை லைவ் செய்த ரன்வீர் சிங்!

Bookmark and Share

செல்பி படுத்தும் பாடு... ஆபரேஷனை லைவ் செய்த ரன்வீர் சிங்!

செல்போன் என்று ஒன்று வந்ததில் இருந்தே, அதன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இன்று ஒரு மினி கம்யூட்டராக மாறியுள்ள செல்போனில் தான் இன்றைய இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அனைவரும் மூழ்கி கிடக்கின்றனர்.

குறிப்பாக பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் என்று வந்தபிறகு அவர்களுக்கு நேரம் போவதே தெரியவில்லை. அதிலும் இப்போது பரவியிருக்கும் செல்பி.... ஸ்ஸ்ஸ்ப்பா... முடியல... நின்றால் செல்பி, நடந்தால் செல்பி, உட்கார்ந்தால் செல்பி... என எதை எதைத்தான் செல்பி எடுத்து போட வேண்டும் என்று விவஸ்த்தை இல்லாமல் போய்விட்டது.

இதற்கு சினிமா பிரபலங்களும் விதிவிலக்கு அல்ல. இப்போது இந்தி நடிகர் ரன்வீர் சிங், தான் கையில் செய்து கொண்ட ஆபரேஷனை செல்பி எடுத்து அதை லைவ்வாக டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார்.

சமீபத்தில், 'பாஜிராவ் மஸ்தானி' என்ற படத்தில் நடித்த போது ரன்வீருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த காயத்தையொட்டி மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆபரேஷன் நடந்தது. அதை அப்படியே செல்பி எடுத்தபடியும், வர்ணனை செய்தபடியும் டுவிட்டரில் போஸ்ட் செய்துள்ளார் ரன்வீர் சிங்.இன்னும் எதையெல்லாம் எடுத்து செல்பி போட போகிறார்களா...? 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions