முதல் படத்திலேயே உதட்டு முத்தக்காட்சியில் நடித்த மலையாள நடிகை ரக்ஷா!

Bookmark and Share

முதல் படத்திலேயே உதட்டு முத்தக்காட்சியில் நடித்த மலையாள நடிகை ரக்ஷா!

மலையாளத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் பெரும்பாலான நடிகைகள் ஏகப்பட்ட கண்டிசன்களை போட்டுத்தான் நடிக்கிறார்கள். அவர்களில் நயன்தாரா மட்டுமே விதிவிலக்கு. இவரும் ஆரம்பத்தில் கொஞ்சம் மக்கர் பண்ணத்தான் செய்தார்.

ஆனால், பின்னர் பில்லாவில் அதிரடி அவதாரமெடுத்து தனது ரூட்டை மாற்றிக்கொண்டார். அந்த வகையில், லட்சுமிமேனனும் கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு வரை போர்த்திக்கொண்டு நடித்தவர், நான் சிகப்பு மனிதனில் விஷாலுடன் தண்ணீருக்குள் முத்தக்காட்சியில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், தற்போது தொப்பி என்ற படத்தில் அறிமுகமாகியிருக்கும் இன்னொரு மலையாள நடிகை ரக்ஷா, முதல் படத்திலேயே கதாநாயகன் முரளிராமின் உதட்டில் பச்சக்கென்று முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதுபற்றி ரக்ஷா கூறுகையில், இந்த காட்சி கதைக்கு அவசியமானது என்று டைரக்டர் சொன்னதுமே நான் தயாராகி விட்டேன்.

அதேசமயம், காட்சி ஓகே ஆகவில்லையென்றால் பத்து டேக் என்றாலும் எடுத்துக்கொண்டேயிருப்பேன் என்று சொன்னார். அதனால், ஒரே டேக்கில் ஓகே செய்து விட வேண்டும் என்று முடிவெடுத்த நான், டைரக்டர் சொன்னதை நன்றாக உள்வாங்கிக்கொண்டு ஒரே டேக்கில் நடித்து ஓகே செய்து விட்டேன் என்று சொன்ன ரக்ஷா, இது முதல் படம் என்பதோடு முதல் முத்தக்காட்சி அனுபவம் என்பதால், காட்சியில் நடித்த முடித்த சிறிது நேரத்திற்கு பிறகே எனக்குள் ஏற்பட்டிருந்த பதட்டம் என்னை விட்டு விலகியது என்கிறார். 


Post your comment





Related News
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
இந்தி நகைச்சுவை நடிகர் ரசாக் கான் மரணம்!
‘கோபத்தை விட்டுவிடு’- மனைவிக்கு சாய் பிரசாந்த் எழுதிய உருக்கமான கடிதம்!
மனைவி தன்னை விட்டு போனதால் தற்கொலை செய்து கொண்ட சாய் பிரசாந்த்?
சின்னத்திரை நடிகர் சாய்பிரசாந்த் விஷம் குடித்து தற்கொலை
இனி தொடர்ந்து படங்களில் நடிப்பேன்: பிரசாந்த்!
பிரசாந்த் படத்தின் தலைப்பு மாற்றம்
பிரஷாந்தின் சாஹசத்தை வாங்கிய தேனாண்டாள் பிலிம்ஸ்!
அடுத்த படத்திற்கு தயாரான பிரசாந்த்!
பிரஷாந்த் நடிப்பில் உருவாகும் “இருபத்தியாறு 26”








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions