டைரக்சனில் காலடி எடுத்துவைக்க ரசூல் பூக்குட்டி முடிவு..!

Bookmark and Share

டைரக்சனில் காலடி எடுத்துவைக்க ரசூல் பூக்குட்டி முடிவு..!

ஸ்லம் டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுடன் சேர்ந்து ஆஸ்கர் விருது வாங்கிய இன்னொரு நபர் சவுண்ட் இஞ்சினியரான ரசூல் பூக்குட்டி. இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் தொடர்ந்து கோச்சடையான், யான் என தமிழ்ப்படங்களில் பணிபுரிந்தாலும் பெரும்பாலும் பணியாற்றுவது இந்திப்படங்களில் தான்.

தற்போது இவர் கைவசம் நான்கைந்து இந்திப்படங்களும் பிராமிஸ் டாட் என்கிற ஹாலிவுட் படமும் இருக்கின்றன.ஆனால் ரசூல் பூக்குட்டிக்கோ தனது கிரியேட்டிவிட்டியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்பதுதான் தற்போதைய ஆசை.

சினிமாவில் தாகம் கொண்ட அனைத்து கலைஞர்களுக்கும் இந்த ஆசை இருக்கவே செய்யும். அந்த வகையில் ரசூல் பூக்குட்டியின் கவனம் படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் தற்போது திரும்பியிருக்கிறது. எந்த மொழியில், யாரை வைத்து என்பதெல்லாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார் ரசூல் பூக்குட்டி. 


Post your comment





Related News
ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்
ஆசைப்பட்டது நோபல்; கிடைத்ததோ ஆஸ்கர்! - ரசூல் பூக்குட்டி!
அன்னையும் ரசூலும் தமிழில் - கூடவே ஆண்ட்ரியா.
மலையாள நடிகரின் அவசர காதலுக்கு ரெட் கார்ட் போட்ட ஆண்ட்ரியா!
அமிதாப்புடன் மீண்டும் இணையும் ரஜினி!
ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியுடன் இணையும் அமிதாப்பச்சான்!
தனுஷ், ஸ்ருதி நடிக்கவே இல்லை : ரசூல் பூக்குட்டி கருத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions