ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

Bookmark and Share

ரசூல் பூக்குட்டி இயக்கத்தில் நடிக்கும் அமிதாப் பச்சன்

ஆஸ்கர் விருது வென்ற சவுண்ட் என்ஜினியரான ரசூல் பூக்குட்டி தற்போது இயக்குனராகவும் மாறவுள்ளார். அவர் இயக்குனராகும் படத்தில் நடிப்பதற்காக பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து ரசூல் பூக்குட்டி கூறும்போது, அமிதாப் பச்சனை சந்தித்து நான் எழுதிய கதையை கூறினேன். அவருக்கு அந்த கதை பிடித்துவிட்டது. மேலும், அவர் இந்த கதையில் நடிக்க விருப்பமும் தெரிவித்துள்ளார். அவருடைய தேதிக்காக காத்திருக்கிறோம். அது முடிவாகிவிட்டதும் படப்படிப்பை தொடங்கிவிடுவோம் என்று ரசூல் பூக்குட்டி தெரிவித்துள்ளார்.

ரசூல் பூக்குட்டி ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். இப்படத்தை தொடர்ந்து இந்தியில் ‘ரா ஒன்’ படத்துக்கு சவுண்ட் என்ஜினியராக பணியாற்றினார். தற்போது கோலிவுட்டில் ரஜினி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ‘2.ஓ’ படத்துக்கும் இவர்தான் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

இதுமட்டுமில்லாமல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கும் ‘ரெமோ’ படத்திற்கும் ரசூல் பூக்குட்டிதான் சவுண்ட் என்ஜினியராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில், இவர் இயக்குனராக அறிமுகமாகும் படத்தில் அமிதாப்பச்சன் நடிப்பது உறுதியானால் அது பிரம்மாண்டமாக அமையும் என்பது மட்டும் உறுதி.


Post your comment





Related News
ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை
விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
விவசாயிகளின் ரூ.1½ கோடி வங்கி கடனை செலுத்திய நடிகர் அமிதாப்பச்சன்
நடிகர் அமிதாப்பச்சன் ரூ.2 கோடி நிதி - ராணுவ வீரர்களின் விதவைகள், விவசாயிகளுக்கு வழங்குகிறார்
மத்திய விளையாட்டுத்துறை மந்திரியின் சவாலை ஏற்ற அமிதாப் பச்சன்
தினேஷ் கார்த்திக்கிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் அமிதாப் பச்சன்
அமிதாப்-ஜெயா பச்சன் ஆகியோரின் மொத்த சொத்து மதிப்பு! கேட்டால் உங்களுக்கு தலைசுற்றிப்போகும்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமிதாப்பச்சன், தற்போதைய நிலை என்ன?
தமிழில் முன்னணி நடிகருடன் நடிக்க வரும் அமிதாப்பச்சன் - இயக்குனர் யார் தெரியுமா?
கார் விபத்தில் நான் சிக்கவில்லை - நலமாக இருக்கிறேன்: அமிதாப் பச்சன் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions