பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!

Bookmark and Share

பெனாசீர் புட்டோவாக நடிக்கிறார் ரவீனா டாண்டன்.?!

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரவீனா டாண்டன். தமிழில் ஆளவந்தான் படத்தில், கமல் ஜோடியாக நடித்திருந்தார். ரவீனாவுக்கு வாய்ப்பு குறைந்ததால், முன்பு போன்று அவர் சினிமாவில் நடிப்பதில்லை.

இந்நிலையில், இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசீர் புட்டோவின் வாழ்க்கையை மையமாக வைத்து பாலிவுட்டில் ஒரு படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தில் நடிகை வித்யாபாலானை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் இப்போது அவருக்கு பதிலாக ரவீனா டாண்டனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் கதையை ரவீனாவிடம் கூறியிருக்கிறார் இயக்குநர்.

ரவீனாவுக்கும் கதை பிடித்து போய் உள்ளதாம். மிகவும் ஒரு வலுவான கதாபாத்திரம் என்பதால் ரவீனாவும் நடிக்க தயாராக இருக்கிறார். ஆனால் கதையில் சில மாற்றங்களை செய்ய சொல்லி இருக்கிறார் ரவீனா.

அதற்கு இயக்குநர் சரி என்று சொன்னால் ரவீனா நடிப்பார் என தெரிகிறது. மேலும் இப்படத்திற்கு அவரும் ஒரு தயாரிப்பாளராக இணைய சம்மதம் சொல்லியிருப்பதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
கோவில்ல இப்படியா செய்வாங்க? பிரபல நடிகையின் மீது போலீசில் புகார்.!
பாலியல் படத்துக்கு சர்டிஃபிக்கேட் கிடையாதா ? நடிகை ரவீணா கொதிப்பு
இந்தி பட உலகை நம்பி நான் இல்லை: கமல் பட நாயகி அதிரடி
பாட்டிலை திருடிய நடிகை! ரஜினிக்கு இப்படி ஒரு ரசிகையா?
உலகின் மிகப்பெரிய லட்டை திறந்த ஆளவந்தான் நாயகி
பெனாசிர் கேரக்டருக்கு ரெடியாகும் ரவீணா
மீண்டும் நடிப்பு : ரவீணா பெருமிதம்
கத்தி படத்தில் சமந்தாவுக்கு குரல் கொடுத்த ரவீனா ரவி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions