ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் ஹீரோக்கள்

Bookmark and Share

ஒரே ஒரு வெற்றிக்காக போராடும் ஹீரோக்கள்

ஒரு காலத்தில் சினிமாவில் நுழைவது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் நுழைந்து விட்டால் நின்று விளையாடலாம். அன்று அறிமுகமான ஹீரோக்கள் குறைந்தது 50 படங்களிலாவது நடிக்காமல் போகமாட்டார்கள்.

அதில் 40 படங்களாவது வெற்றிப் படமாக இருக்கும். ஆனால் இன்றைக்கு அந்த நிலைமை தலைகீழாக இருக்கிறது. இன்று சில லட்சங்கள் கையில் இருந்தால் ஹீரோவாகி விடலாம். ஆனால் நிலைத்து நிற்பதுதான் கஷ்டம்.

வருடத்திற்கு 200 படங்கள் ரிலீசாகிறது என்றால் அதில் 150 புதிய ஹீரோக்கள் அறிமுகமாகிறார்கள். அவர்களில் 99 சதவிகிதம் பேர் ஒரு படத்துடன் சினிமாவை விட்டே போய்விடுகிறார்கள்.

பலமான சினிமா பின்னணி கொண்டவர்கள், பெரும் பணபலம் படைத்தவர்கள், சினிமா வாரிசுகள் மட்டுமே நடித்த படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் நிலைத்து நிற்க முடியும். மற்றவர்களால் முடியாது. ஒரு ஹிட் படம் கொடுத்தும் அடுத்த ஹிட் படம் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்தின் மகன் ரவிகிருஷ்ணா 7ஜி ரெயின்போ  காலனி  என்ற ஹிட் படத்தில் நடித்தார். அதற்கு பிறகு அவர் வெற்றியை ருசிக்கவே இல்லை.  ஆர்.பி.சவுத்ரியின் மகன் ரமேஷ், ஜித்தன் என்ற ஒரு ஹிட் படத்தில் அறிமுகமானார்  அதன்  பிறகு அவர் நடித்த படங்கள் ஹிட்டாகவில்லை. இப்படி நிறைய ஹீரோக்கள் ஒரு வெற்றியை கொடுத்து விட்டு அடுத்த வெற்றிக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பல படங்களில் நடித்த பிறகும் ஒரு வெற்றிக்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் ஹீரோக்கள் நிறைய இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சினிமா பின்னணி கொண்டவர்கள்.

பி.வாசு மகன் ஷக்தி நான்கைந்து படங்களில் நடித்தும் ஒரு வெற்றியையும் பெறவில்லை. கே.பாக்யராஜ் மகன் சாந்தனு, விஜய் சித்தி மகன் விக்ராந்த், ஷாலினியின் தம்பி ரிச்சர்ட், தெலுங்கு இயக்குனர் மகன் ஆதி, கார்த்திக் மகன்  கவுதம், முரளி மகன் அதர்வா, பாரதிராஜா மகன் மனோஜ், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மகன் சரண், தேவயானியின் தம்பி நகுல், இயக்குனர் ஏ.எல்.விஜய்யின் சகோதரர் உதயா, பாடலாசிரியர்கள் சினேகன், பா.விஜய் இவர்கள் எல்லாம் பல படங்களில் நடித்தவர்கள், நடித்துக் கொண்டிருப்பவர்கள் ஆனாலும் ஒரே ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள், காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்கள் தவிர ஷாம், தமன் குமார், அசோக், அசோக் செல்வன், ஜெய் ஆகாஷ், நந்தா, நிதின் சத்யா, ரமணா என ஒரு வெற்றிக்காக ஏங்கும் ஹீரோக்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். இனிவரும் காலங்களில் இவர்களில் பலர் முதல் வெற்றியை ருசிக்கலாம். பலர் சினிமாவை விட்டே விலகலாம். எல்லாமே காலத்தின் கையில் இருக்கிறது.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
கழுகு - 2 படத்தின் டப்பிங் தொடங்கியது..!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions