ரவி தேஜாவின் அதிரடி ஆரம்பம்

Bookmark and Share

ரவி தேஜாவின் அதிரடி ஆரம்பம்

தெலுங்கு திரை உலகின் மாஸ் மகாராஜா என ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள கிக் 2 படத்தை டோலிவுட் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.

இப்படம் ஜுன் 17ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் தரப்பில் கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகளை முடித்து விட்ட ரவி தேஜா, தற்போது தனது அடுத்த படமான பெங்கால் டைகர் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளார்.

ராதா மோகன் தனது ஸ்ரீசத்ய சாய் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வரும் இப்படத்தை இயக்குநர் சம்பத் இயக்கி வருகின்றார். இப்படத்தில் ரவி தேஜா போலீசாக நடித்து வருகின்றார்.

இதனால் தற்போது போலீஸ் ஸ்டேஷனில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றதாம். அங்கு ரவி தேஜா பங்கேற்கும் அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றதாம். இப்படத்தில் தமன்னா மற்றும் ரிஷி  கண்ணா ஆகியோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர். இசையமைப்பாளர் பீம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions