மீண்டும் வருகிறார் ரவிகிருஷ்ணா!

Bookmark and Share

மீண்டும் வருகிறார் ரவிகிருஷ்ணா!

செல்வராகவன் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தில் அறிமுகமானவர் ரவி கிருஷ்ணா. பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகனான இவர் அதைத் தொடர்ந்து, சுக்ரன், பொன்னியின் செல்வன், கேடி, ஆரண்ய காண்டம் என பல படங்களில் நடித்தார். அதையடுத்து அவருக்கு சுத்தமாக படங்களே இல்லை.

அவருக்காக கதை ரெடி பண்ணிக்கொண்டு சில இயக்குனர்கள் அவரது தந்தையான ஏ.எம்.ரத்னத்தை அந்த படங்களை தயாரிக்க சொன்னபோது, ஏற்கனவே கேடி படத்தை அவரை வைத்து தயாரித்து நஷ்டத்தில் இருந்த அவர், தொடர்ந்து நான் நஷ்டப்பட தயாராக இல்லை என்று மறுத்து விட்டார்.

தந்தையே மகனுக்காக படம் தயாரிக்க முன்வராததால் அதன்பிறகு ரவிகிருஷ்ணாவை நம்பி எந்த தயாரிப்பாளரும் படம் தயாரிக்க முன்வரவில்லை. அதனால் சில ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்த ரவிகிருஷ்ணா, தற்போது நல்ல கதை கிடைத்தால் நடிக்கலாம் என்று சில டைரக்டர்களை அழைத்து கதை கேட்கத் தொடங்கியிருக்கிறார்.

ஆனால், அப்படி அவர் கதை கேட்கும் படத்தை கண்டிப்பாக ஏ.எம்.ரத்னம் தயாரிக்கப்போவதில்லையாம். ரவிகிருஷ்ணாவுக்கு நெருக்கமான சில நண்பர்கள்தான் அந்த படத்தை தயாரிக்கிறார்களாம்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions