ஆர்.சி.சக்தியின் உடல் தகனம்

Bookmark and Share

ஆர்.சி.சக்தியின் உடல் தகனம்

மறைந்த இயக்குநர் ஆர்.சி.சக்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. கமல்ஹாசன் நடித்த, 'உணர்ச்சிகள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆர்.சி.சக்தி. வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த சக்தி, உணர்ச்சிகள்தவிர்த்து தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவர் இயக்கிய, பத்தினி பெண் படத்திற்கு, தமிழக அரசின் சிறந்த படம், சிறந்த கதை வசனகர்த்தா விருது கிடைத்தது.  சென்னை, விருகம்பாக்கம், சாய்நகர் வீட்டில் வசித்து வந்த ஆர்.சி.சக்தியின் உடல் நிலை, சில தினங்களுக்கு முன் பாதிக்கப்பட்டது.

சென்னையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் இறந்தார். சக்தியின் நெருங்கிய நண்பரான கமல், மருத்துவமனையிலேயே சென்று சக்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து சக்தியின் உடல் அஞ்சலிக்காக விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. கனிமொழி எம்.பி., டைரக்டர்கள் விக்ரமன், கே.எஸ்.ரவிக்குமார், பி.வாசு, ஆர்.கே.செல்வமணி, டி.பி.கஜேந்திரன், தயாரிப்பாளர் கேயார், நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், சக்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விருகம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா ; சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
தானும் அழுது அத்தனை பேரையும் அழவைத்த சூப்பர் சிங்கர் சக்தி! கண்ணீர் விடவைத்த தருணம்
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions