திரைப்பட இயக்குநர் ஆர்.சி. சக்தி காலமானார்

Bookmark and Share

திரைப்பட இயக்குநர் ஆர்.சி. சக்தி காலமானார்

திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி உடல்நலக்குறைவு காரணமாக, இன்று காலமானார். வித்தியாசமான கதை அமைப்பு கொண்ட படங்களை இயக்குவதில் தன்னிகரற்ற இயக்குநராக திகழ்ந்த ஆர்.சி.சக்தி, 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். உணர்ச்சிகள், தர்மயுத்தம், சிறை உள்ளிட்ட இவரது படங்கள், மக்களை பெரிதும் கவர்ந்தன.

உணர்ச்சிகள் படத்தில், கமலஹாசனை, முதன்மை கேரக்டரில் அறிமுகப்படுத்தியவர் ஆர்.சி.சக்தியே ஆவார். ரஜினிகாந்தை வைத்து தர்மயுத்தம் படத்தையும், விஜயகாந்தை வைத்து மனக்கணக்கு படத்தையும் ஆர்.சி.சக்தி இயக்கியுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த புழுதிகுளத்தில் பிறந்த ஆர்.சி.சக்தி, சிறுவயதிலேயே, கல்வியில் கவனத்தை செலுத்தாமல், நடிப்புத்துறையிலேயே அவரது முழுக்கவனமும் இருந்தது.

இளைஞராக இருந்தபோதே, நண்பர்களுடன் இணைந்து நாடகக் கம்பெனியை துவங்கினார். வாழ்க்கை வாழ்வதற்கே என்ற நாடகத்தில், வில்லன் கேரக்டரில் நடித்தார். கிராம மக்கள் அனைவரும் சக்தியின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமல்லாது, அவர் சினிமாவில் நுழையவும் அவருக்கு ஆதரவு அளித்தனர் சினிமா ஆசையில், சென்னை வந்த சக்தி, வில்லுப்பாட்டு புகழ் சுப்பு ஆறுமுகம் குழுவில் சேர்ந்து, திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிவந்தார்.

தீவிர முயற்சிக்கு பிறகு, பொற்சிலை படத்தில், உதவி இயக்குநராக பணியாற்றினார். பின் டான்ஸ் மாஸ்டர் தங்கத்துடன் இணைந்து, அன்னை வேளாங்கண்ணி படத்தில் திரைக்கதை எழுதினார்.

பின், 1972ம் ஆண்டு, உணர்ச்சிகள் படத்தின் மூலம் இயக்குநராக உயர்ந்தார். தனது முதல் படத்திலேயே, பால்வினை நோய்களை மையமாகக்கொண்டு படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. நடிகர் கமலஹாசன், தனது ஒவ்வொரு பேட்டியிலும், ஆர்.சி.சக்தியின் பெயரை குறிப்பிட தவறியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
படத்தொடக்கவிழாவில் நடந்த வளைகாப்பு வைபவம் - ஒரு புதுமையான சினிமா விழா..!
வேலையை ராஜினாமா செய்த அர்ச்சனா! காரணம் இதுதானாம்..
தமிழ்படம் 2 வெளியாவதில் சிக்கல்- எதனால் தெரியுமா
2 நாள் நடித்துவிட்டு விலகிய மிர்ச்சி சிவா! பின்னர் படம் ஹிட்டான கதை தெரியுமா
தமிழ்படம் 2.0 படத்தின் பெயர் மாற்றம்! புதிய பெயர் இதோ..
அடப்பாவிங்களா பிக்பாஸையும் விட்டு வைக்கவில்லையா! தமிழ்படத்தின் அடுத்த அலப்பறை
நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்
தொகுப்பாளி அர்ச்சனா வாழ்க்கையில் இப்படியொரு சோகமா? - ஷாக்கான ரசிகர்கள்.!
சரியான திட்டமிடல், நல்ல செயல்பாடு, சிறப்பான ஒத்துழைப்பு - மிஸ்டர் சந்திரமௌலி படப்பிடிப்பு நிறைவு!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions