போதை பொருள் வழக்கில் என்னை தொடர்புபடுத்துவதா? ரீமாகல்லிங்கல் ஆவேசம்

Bookmark and Share

போதை பொருள் வழக்கில் என்னை தொடர்புபடுத்துவதா? ரீமாகல்லிங்கல் ஆவேசம்

ரீமா கல்லிங்கல் தமிழில் பரத் ஜோடியாக யுவன் யுவதி படத்தில் நடித்தார். மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ரீமா கல்லிங்கலுக்கும் மலையாள டைரக்டர் ஆஷிக்அபுவுக்கும் 2013–ல் திருமணம் நடந்தது.

சமீபத்தில் போதை பொருள் வழக்கில் ரீமா கல்லிங்கல், ஆஷிக்அபு, மலையாள நடிகர் பகத் பாசில் ஆகியோரை தொடர்புபடுத்தி கேரளாவில் உள்ள பத்திரிகையில் செய்திகள் வந்தன. போதைபொருள் தடுப்பு போலீசார் இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்துவதாகவும் கூறப்பட்டது. இது மலையாள பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனை ஆஷிக்அபு மறுத்தார். எனக்கும் ரீமா கல்லிங்கலுக்கும் போதை பொருள் வழக்கில் தொடர்பு இல்லை. போலீசார் எங்களிடம் விசாரிக்கவும் இல்லை. அவதூறு வழக்கு தொடர திட்டமிட்டு உள்ளேன் என்றார்.

ரீமா கல்லிங்கலுக்கு இதனை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, போதை பொருள் வழக்கில் என்னை தொடர்பு படுத்தி இருப்பது வெட்கங்கெட்ட செயல். மற்றவர்கள் மீது இது போன்ற அவதூறுகள் பரப்புவது கண்டிக்கத்தக்கது. உண்மைக்கு புறம்பாக இப்படி செய்திகள் பரப்புவது அநாகரீகமானது என்றார்.


Post your comment





Related News
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
பிரபல நடிகை ரீமாசெனுக்கா இப்படியொரு நிலைமை? - அதிர்ச்சியாக்கிய புகைப்படம்.!
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
இந்திய சினிமாவின் முன்னணி நடிகை மரணம்- அதிர்ச்சியில் திரையுலகம்
அல்போன்ஸ் புத்ரனுக்கு ரீமா கல்லிங்கல் ஆதரவு..!
மனைவிக்காக படம் எடுக்கும் மலையாள இயக்குனர்..!
“மஞ்சு வாரியர் என் படத்துல இருக்காங்கப்பா.. வதந்தியை கிளப்பாதீங்க”..!
அரசியலில் நுழைய ஆழம் பார்க்கும் ரீமா கலிங்கல்!
என் அடுத்த படத்தின் ஹீரோயின் என் மனைவிதான்: ரீமா கல்லீங்கல் கணவர்..!
கவர்னரை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய நடிகை ரீமா..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions