கோபிசந்துடன் டூயட் பாட தயாராகும் ரெஜினா

Bookmark and Share

கோபிசந்துடன் டூயட் பாட தயாராகும் ரெஜினா

கோலிவுட்டில் பட வாய்ப்புகள் இல்லாததால் டோலிவுட் பக்கம் சென்ற நடிகை ரெஜினா, தற்போது அங்கு பல  பட வாய்ப்புகளை  பெற்று வருகின்றார். ரெஜினா நாயகியாக நடித்து வெளிவந்த ரா ரா கிருஷ்ணய்யா படம் அவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது.

சுப்ரமணியம் பார் சேல் எனும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் ரெஜினா, நடிகர் மஞ்சு விஷ்ணு நாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். 

இந்நிலையில் நடிகர் கோபிசந்த் நாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரெஜினா ஒப்பந்தமாகியுள்ளாராம். நடிகர் ஜெயம் ரவிக்கு வெற்றி படமாக அமைந்த ஜெயம் படத்தில் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த் பல தெலுங்கு படங்களில் நாயகனாக நடித்து வருகின்றார்.

இயக்குநர் ரவிக்குமார் சௌத்ரி இயக்கும் படத்தில் கோபிசந்த் நாயகனாக நடிக்கின்றார். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்கவுள்ளார். 

பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் வெற்றி படம் இயக்கிய ரவிக்குமார் அப்படத்தில் நடித்த ரெஜினாவை தனது அடுத்த படத்திற்கும் நாயகியாக தேர்வு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் ஜூலை 15 ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
ரெஜினாவின் சர்ச்சை கதாபாத்திரத்திற்கு வரவேற்பு
அதிக சம்பளம் என்றால் இப்படியும் நடிப்பாரா ரெஜினா?
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
ரெஜினாவின் பிகினி உடையை மேடையில் கலாய்த்த நடிகர் சதிஷ்
போதைக்கு அடிமையான பிரபல நடிகை - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை, கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
எனது திறமைக்கு தீனி போடுங்கள்: நடிகை ரெஜினா
விட்ட இடத்தை கண்டிப்பாக பிடிப்பேன், ஜெயிப்பேன்: ரெஜினா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions