மாநகரம் படம் பற்றி பைரவா எடிட்டர் என்ன சொன்னார் தெரியுமா?

Bookmark and Share

மாநகரம் படம் பற்றி பைரவா எடிட்டர் என்ன சொன்னார் தெரியுமா?

விஜய் நடித்த பைரவா படம் நல்ல வசூல் பார்த்தது. இப்படத்தின் எடிட்டிங் பணிகளை கவனித்து கொண்டவர் பிரபல எடிட்டர் கே.எல்.பிரவீன்.

இவர் வரும் மார்ச் 3 ல் வெளியாகவுள்ள மாநகரம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார். மாநகரம் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

நீண்ட நாட்களுக்கு பின் நான் இது போன்ற சிறந்த படத்தை பார்த்துள்ளேன்.

ஸ்கிரிப்டில் உள்ள கதைக்கு ஏற்றார் போல ஸ்கீரினிலும் காட்சிகளை கொண்டுவருவது சவாலான விசயம்.

ஆனால் இயக்குனர் லோகேஷ் தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். படத்தை சரியாக நகர்த்தியுள்ளார்.

படத்தில் நடித்துள்ள ஸ்ரீ, ரெஜினா, முனிஷ்காந்த், சார்லி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளார்கள்.

தயாரிப்பாளர்கள் பிரபு, பிரகாஷ் இந்த படத்தை தயாரிக்க முடிவு செய்ததற்கே அவர்களை பாராட்டியாகவேண்டும் , அனைவரும் படத்தை பார்க்கவேண்டும் எனவும் பிரவீன் கூறியுள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions