மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!

Bookmark and Share

மகளை பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரேகா.!

கடலோரக் கவிதைகள், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, புரியாத புதிர் போன்ற வெற்றித் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து புகழ்பெற்றவர் நடிகை ரேகா. இவர் தற்போது ஜெயப்பிரதா, பார்த்திபன், ரேவதி, நாசர், அனுஹாசன் ஆகியோருடன் இணைந்து "கேணி" திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் இவரது மகள் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவிருப்பதாக வதந்தி சமூக வளைதலங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் கசிய விடப்பட்டது.

இதனை மறுத்து நடிகை ரேகா விளக்கமளித்திருக்கிறார். அதில் "மதிப்பிற்குரிய ஊடக நண்பர்களுக்கு, என் மகள் சினிமாவில் நடிக்கவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், சில இணையதள பக்கங்களிலும் தவறான செய்திகள் பரப்பப்படுவதாக அறிகிறேன். அந்த செய்தியில் எள்ளளவும் உண்மையில்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், என் மகள் உயர்கல்வி படிப்பதற்காக ஆயத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதையும், சினிமாவில் நடிப்பதற்கான ஆர்வமோ, ஆசையோ அவருக்குத் துளியும் இல்லை என்பதனையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். இது சம்பந்தமாக தவறான தகவல்களை பரப்பி வருவோர் இனியும் தொடராமல் நிறுத்திக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

 


Post your comment





Related News
கொடூரமான தெய்வமகள் காயத்ரி அண்ணியார் இப்படிப்பட்டவரா?
இதுவரை யாரும் பார்க்காத பிரபல நடிகை ரேகாவின் மகள் - வைரலாகும் புகைப்படம்.!
றெக்க ரிலீஸ் தேதி உறுதியானது !
நடிகை ரேகாவுக்கு யாஷ் சோப்ரா விருது
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
நடித்தது திருப்தியில்லை - படத்திலிருந்து பாதியில் வெளியேறிய ரேகா
அமிதாபின் ஷமிதாபில் ரேகா இருக்கார், ஆனால் இல்லை
ரேகாவுக்கு இன்று 60 வயது: ஆனாலும் அழகு தேவதை...
தனுஷ் படத்தில் இந்தி நடிகை ரேகா
நியமன எம்.பி. பதவி கிடைத்தால் பரிசீலிப்பேன்: நடிகர் அமீர்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions