பொது இடங்களில் வித்தியாசமான ரெமோ விளம்பரம்!

Bookmark and Share

பொது இடங்களில் வித்தியாசமான ரெமோ விளம்பரம்!

ரஜினி முருகன் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் கூட்டணி மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்திருக்கும் படம் ரெமோ. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கி வருகிறார்.

சிவகார்த்திகேயனின் ஆஸ்தான இசையமைப்பாளர் அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைதொடர்ந்து இப்படத்தின் புரொமோஷன் தற்போது வேகமாக நடந்துவருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரசிகர்கள் விரும்பும் ‘கியூபிட்’ சிலைகளை ஆயிரக்கணக்கில் தயார் செய்து அதை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions