ரெமோவை முடித்த சிவகார்த்திகேயன்!

Bookmark and Share

ரெமோவை முடித்த சிவகார்த்திகேயன்!

‘ரஜினிமுருகன்’ படத்திற்குப் பின் அறிமுக இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்த படம் ‘ரெமோ’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடங்களில் ‘ஆடுகளம்’ நரேன், கே.எஸ்.ரவிக்குமார், சதிஷ், சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடித்து வந்தனர்.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்து வந்தது. இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு பி.சி.ஸ்ரீராம் என முன்னணித் தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்தில் இணைந்து பணியாற்றினர். சிவகார்த்திகேயனின் நீண்ட நாள் கால்ஷீட் மற்றும் படத்தின் பட்ஜெட் ஆகியவை இப்படத்தின் மீதான ரசிகர்கள் எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நேற்றுடன் முடிவுக்கு வந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு முடிந்ததைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை விரைந்து முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களைக் குறிவைத்து அக்டோபர்-7 ம் தேதி ‘ரெமோ’ வெளியாவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்
ரெமோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரெமோவின் உலகளாவிய பிரம்மாண்ட வசூல் விவரம்!
ரெமோ இரண்டு வார வசூல் விவரம் வெளியானது!
குறிப்பிட்ட ஏரியாவில் ரெமோ செய்த வசூல் சாதனை!
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரெமோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions