திரைக்கு வர தயாராகிவிட்டது ‘ரெமோ’

Bookmark and Share

திரைக்கு வர தயாராகிவிட்டது ‘ரெமோ’

தமிழக ரசிகர்களின் மத்தியில் தொடர்ந்து தலைப்பு செய்தியாக பேசப்பட்டு வரும் திரைப்படம் ‘ரெமோ’. முற்றிலும் புதுமையான கதை களம், மிகச்சிறந்த மார்க்கெட்டிங் யுக்தி என பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘ரெமோ’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இந்த செய்தியை ரெமோ படக்குழுவினர், தங்களுக்கே உரிய பிரமாண்ட விதத்தில் அறிவித்தனர்.

“சொன்ன தேதியில் படப்பிடிப்பை முடிப்பது என்பது எல்லா தயாரிப்பாளர்களுக்கும் ஒரு மிக பெரிய சவாலாக தான் இருக்கும். அந்த வகையில் நாங்கள் திட்டமிட்ட காலத்திற்குள் எங்கள் படப்பிடிப்பை முடித்து இருக்கிறோம். ஒரு தயாரிப்பாளராக இதை விட மகிழ்ச்சி வேறெதுவும் இருக்காது.

மிக விரைவில் எங்களின் இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் நிறைவேற உள்ளது. தசரா விடுமுறை நாட்களான அக்டோபர் 7 ஆம் தேதி வெளியாகும் எங்களின் ‘ரெமோ’ படமானது நிச்சயமாக ரசிகர்களின் அன்பையும் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா.

 


Post your comment





Related News
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்
ரெமோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரெமோவின் உலகளாவிய பிரம்மாண்ட வசூல் விவரம்!
ரெமோ இரண்டு வார வசூல் விவரம் வெளியானது!
குறிப்பிட்ட ஏரியாவில் ரெமோ செய்த வசூல் சாதனை!
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரெமோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions