சிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீடு!

Bookmark and Share

சிங்கப்பூரில் ரெமோவின் சிங்கிள் டிராக் பாடல் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ரெமொ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஆர்ட் டைரக்டர் முத்துராஜ், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்கள் கைகோர்த்து பணியாற்றி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் ஹாலிவுட் மேக்கப் மேன் சீன் பூட்ஸும் பணியாற்றி வருகிறார்.

மேலும், கீர்த்தி சுரேஷ் இந்த படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வருகிற ஜுலை 1-ந் தேதி இப்படத்தின் சிங்கிள் பாடல் ஒன்றை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

விக்னேஷ் சிவன் எழுதியுள்ள ‘செஞ்சிட்டாளே’ என்ற பாடலைத்தான் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம். ஜுலை 1-ந் தேதி சிங்கப்பூரில் நடைபெறும்  SIIMA விருது வழங்கும் விழாவில் இதை வெளியிடவுள்ளார்களாம். இதுகுறித்து அதிகாரப்பூர்வ செய்தி விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்
ரெமோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரெமோவின் உலகளாவிய பிரம்மாண்ட வசூல் விவரம்!
ரெமோ இரண்டு வார வசூல் விவரம் வெளியானது!
குறிப்பிட்ட ஏரியாவில் ரெமோ செய்த வசூல் சாதனை!
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரெமோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions