ரெமோ படத்துக்காக 4 நிமிடம் ஓடும் மியூசிக் வீடியோ!

Bookmark and Share

ரெமோ படத்துக்காக 4 நிமிடம் ஓடும் மியூசிக் வீடியோ!

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து இருக்கும் புதிய படம், ‘ரெமோ’. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து இருக்கிறார். பாக்யராஜ் கண்ணன் டைரக்டு செய்திருக்கிறார். 24 ஏஎம் ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து இருக்கிறார்.

சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியுடன் சதீஷ், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். காதல்-நகைச்சுவை கலந்த கதையம்சம் கொண்ட இந்த படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்த படத்துக்காக, 4 நிமிடங்கள் ஓடும் ‘மியூசிக் வீடியோ’ படம் யூ டியூப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. அதில் சிவகார்த்திகேயன், அனிருத் மற்றும் பின்னணி பாடகர்-பாடகிகள் இடம் பெற்றுள்ளனர்.

அக்டோபர் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக பட அதிபர் ஆர்.டி.ராஜா தெரிவித்தார். அக்டோபர் 8-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்கள் என்பதால் படத்தை வெளியிட அக்டோபர் 7-ந்தேதியை தேர்வு செய்திருப்பதாக அவர் கூறினார். 



Post your comment





Related News
தோல்வியை மறைக்க விழா எடுத்தார்களா ரெமோ படக்குழு?
தெலுங்கிலும் பட்டையக் கிளப்பும் ரெமோ – படக்குழு மகிழ்ச்சி!
ரெமோ’ தெலுங்கில் 500 தியேட்டர்களில் ரிலீஸ்
ரெமோ தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூலா?
ரெமோ படத்துக்கு வரிச்சலுகையை ரத்து செய்ய கோரி வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு நோட்டீசு
ரெமோ பார்த்துவிட்டு சிவகார்த்திகேயனிடம் ரஜினி என்ன சொன்னார் தெரியுமா?
ரெமோவின் உலகளாவிய பிரம்மாண்ட வசூல் விவரம்!
ரெமோ இரண்டு வார வசூல் விவரம் வெளியானது!
குறிப்பிட்ட ஏரியாவில் ரெமோ செய்த வசூல் சாதனை!
ரூ. 50 கோடி கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ரெமோ!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions