எனது உழைப்பிற்கான பலன் கிடைக்கும் ரேஷ்மிமேனன்!

Bookmark and Share

எனது உழைப்பிற்கான பலன் கிடைக்கும் ரேஷ்மிமேனன்!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா, உறுமீன், நட்பதிகாரம், கிருமி ஆகிய படங்களில் நாயகியாக நடித்துள்ளார் ரேஷ்மிமேனன். இதில் கிருமி படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். 

அதோடு வடசென்னை பெண்ணாக அவர் நடிப்பதால் அந்த ஏரியா தமிழை பேசி நடித்த ரேஷ்மிமேனன், துளியும் மேக்கப் போடாமல் இந்த கிருமி படம் முழுக்க நடித்துள்ளாராம். 
இது குறித்து அவர் கூறுகையில், “ கிருமி படம் எனக்கு சவாலான படமாக அமைந்துள்ளது.

எனக்கான கதாபாத்திரம் புதுமையானதாக இருந்ததால்தான் குழந்தைக்கு அம்மாவாக நடித்தேன். அதோடு, படிப்பறிவு இல்லாத பெண் வேடம் என்பதால், வட சென்னையில் உள்ள பெண்கள் எப்படி பேசுவர்களோ அப்படியே பேசி நடித்தேன். ஆனால், டப்பிங்கில் ரொம்ப க்ளியராக பேச வேண்டும் என்கிறபோது, தடுமாறி விட்டேன். 

என்னதான் நான் சென்னையிலேயே பிறந்து வளர்ந்தவள் என்றாலும், நான் கான்வென்டில் படித்தவள். அதனால் டீசன்டான தமிழில்தான் பேசுவேன். குறிப்பாக, நான் பேசும் தமிழில் நிறைய ஆங்கிலமும் கலந்திருக்கும்.

அதனால் இந்த படத்துக்காக வடசென்னை தமிழ் பேசியதோடு, ஓரிரு வார்த்தைகூட ஆங்கிலம் கலக்காமல் பேச ரொம்ப சிரமப்பட்டேன். சில காட்சிகளில் டப்பிங்கை திரும்பத்திரும்ப பேசினேன். 

இதுவரை எந்த படத்திற்காகவும் நான் டப்பிங் பேச இத்தனை கஷ்டப்பட்டதில்லை, ஆனால் இதில் நான் நடித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால், என்னிடமிருந்து சரியான டப்பிங் வரும் வரை இயக்குனர் விடவே இல்லை. இந்த படம் வெளியாகும்போது எனது உழைப்பிற்கான பலன் கிடைக்கும்”என்கிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions