திருமண செய்தியைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ரேஷ்மிமேனன்!

Bookmark and Share

திருமண செய்தியைப் பற்றி அலட்டிக்கொள்ளாத ரேஷ்மிமேனன்!

இனிது இனிது, தேனீர் விடுதி, பர்மா ஆகிய படங்களில் நடித்தவர் ரேஷ்மிமேனன். இவர் மலையாளி என்றபோதும் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தவர். மேலும், தற்போது உறுமீன், நட்பதிகாரம், கிருமி, மாயா உள்பட சில படங்களில் நடித்திருப்பவர், அடுத்தபடியாக மிஷ்கின் நடிக்கும் சவரக்கத்தி படத்திலும் நடிக்கயிருக்கிறார்.

இப்படி அவரது கோலிவுட் மார்க்கெட் சூடு பிடித்திருக்கும் நேரத்தில் உறுமீன் படத்தின் நாயகன் பாபி சிம்ஹாவுடன் ரகசிய திருமணம் என்கிற கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் ரேஷ்மிமேனன்.

ஆனால் அதுபற்றி இரண்டுபேருமே மறுப்பு செய்தி வெளியிட்டுவிட்டு வழக்கம்போல் தங்களது வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனபோதும், இதுபற்றி ரேஷ்மிமேனனை நோக்கி செல்லும் கேள்விக்கணைகள் அதிகரித்திருக்கிறது.

என்றபோதும் அந்த கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. மாறாக, சினிமாவில் ஒரு நடிகை வளருகிறார் என்றால் இந்த மாதிரியான செய்திகள் வருவது வழக்கமான ஒன்றுதான். அதைப்போன்றுதான் என்னைப்பற்றியும் வந்திருக்கிறது.  அதனால் இதை பெருசுபடுத்தக்கூடாது.

அப்படி நான் பதில் கொடுத்தால்தான் ஆளாலுக்கு அதையே வேறுமாதிரியாக எழுதி பிரச்சினையை வளர்த்துக்கொண்டிருப்பார்கள். அதனால் இந்த திருமண கேள்விக்கு நான் எந்த பதிலும் சொல்ல விரும்பவில்லை.

அதோடு சினிமா உலகில் இதைவிட இன்னொரு பரபரப்பு செய்தி வரும்போது இந்த விசயம் காணாமல் போய்விடும் என்று கேசுவலாக பதில் கொடுத்து வருகிறார் ரேஷ்மிமேனன். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions