”ரே” படத்தில் நடிக்கிறாரா பவன் கல்யாண்?

Bookmark and Share

”ரே” படத்தில் நடிக்கிறாரா பவன் கல்யாண்?

ஒரு படத்தை குறைந்தது 2 அல்லது 3 வருடத்தில் ரிலீஸ் செய்துவிடுவார்கள் பெரிய பெரிய இயக்குநர்கள் இதற்கு இயக்குநர் ராஜமௌலி ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் ஒரு படத்தை கிட்டத்தட்ட 5 வருஷமா எடுத்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் கம் தயாரிப்பாளர் YVS சௌத்ரி.

2010 ஆம் ஆண்டு விஜயதசமிக்கு பூஜை போட்டு தொடங்கிய “ரே” திரைப்படம் தற்போது 2015 ஆம் ஆண்டு தான் முடிவுக்கு வந்திருக்கிறது. நடிகர் சார் தரம் தேஜின் முதல் படமான ரே ரிலீசாகாததால் அடுத்த படத்தில் நடிக்க சென்றுவிட்டார் சாய் தரம் தேஜ், அந்த படம் தான் “பிள்ளா நுவ்வு லேனி ஜீவிதம்” என்ற திரைப்படம்.

தற்போது மீண்டும் ரே திரைப்படத்தை தூசி தட்டி புதுப்பித்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் YVS சௌத்ரி, கடந்த செவ்வாய்க்கிழமைதான் இப்படத்திலிருந்து ஒரு பாடலை வெளியிட்டார்கள், அப்பாடலில் டோலிவுட் பவர் ஸ்டார் பவன் கல்யாணை புகழ்ந்து பாடல்கள் இருப்பதால் பவனின் ரசிகர்களுக்கு இப்பாடல் மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதுமட்டுமின்றி ரே திரைப்படத்திற்கும் மறைமுகமாக பவன் கல்யாண் தான் பண உதவி செய்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன, இதனால் இந்த பவனிசம் பாடலில் எப்படியாவது பவன் கல்யாணை நடிக்க வைத்துவிட்டால் படம் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகிவிடும் என திட்டம்போட்டுக் கொண்டிருக்கிறார் YVS சௌத்ரி.

இதுகுறித்து இன்னும் பவன் கல்யாணிடம் பேசவில்லையாம், விரைவில் அவரிடம் பேசி ஒப்புதல் வாங்கிவிடுவோம் என்று கூறியுள்ளார் இயக்குநர் YVS சௌத்ரி. அப்படி அவர் ஒப்புதல் தரவில்லையெனில் கம்ப்யூட்டர் கிராஃபிக்சில் பவன் கல்யாணை வரவழைத்துவிடுவேன் என்று மன ஆறுதல் அடைகிறார் இயக்குநர்.


Post your comment





Related News
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பியார் ப்ரேமா காதல் பட நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜா பேசியதை கேட்டீர்களா..!
பியார் பிரேம காதல் படத்தின் பாடல்களை வெளியிட்ட இளையராஜா..!
கல்யாணமும் கடந்து போகும் வலைத்தொடர் பிராண்டுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது - நலன் குமாரசாமி
வெப் சீரிஸ் தொடரை இயக்கும் நலன் குமாரசாமி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions