ஹீரோயினாக நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது: ரிச்சா பலோட்

Bookmark and Share

ஹீரோயினாக நடிக்கும் தகுதி எனக்கு இருக்கிறது: ரிச்சா பலோட்

இந்தி, தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரிச்சா பலோட், ஷாஜகான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதன் பிறகு அல்லி அர்ஜுனா, காதல் கிறுக்கன், சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் உள்பட பல படங்களில் நடித்தார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹிமாஞ்சி பஜாஜ் என்ற என்ஜினீயரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அகமதாபாத்தில் வசித்து வருகிறார். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு யாகாவாராயினும் நாகாக்க படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆகியிருக்கிறார். மும்பை அண்டர் கிரவுண்ட் தாதா மிதுன் சக்ரவர்த்தியின் மகளாக நடித்திருக்கிறார்.

இதுபற்றி ரிச்சா பலோட் கூறியதாவது: திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் கவனம் செலுத்தவில்லை. என் கணவர், நான் நடிக்க முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறார். யாகாவாராயினும் நாகாக்க இயக்குனர் சத்யா கதை சொன்னபோது எனக்கு பிடித்திருந்தது, நடிக்க ஒப்புக் கொண்டேன்.

கல்யாணத்துக்கு முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே தான் இப்போதும் இருக்கிறேன். நான் சொல்லாவிட்டால் திருமணம் நடந்ததே தெரிந்திருக்காது.

திருமணமாகிவிட்டால் அக்கா-அண்ணி கேரக்டரில் தான் நடிக்க வேண்டும் என்பதில்லை, ஹீரோயினாகவும் நடிக்கலாம். அதற்கான தகுதியோடு தான் நான் இருக்கிறேன். ஆனால் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்க மாட்டேன். நல்ல கேரக்டர் அமைந்தால் நடிப்பது பற்றி யோசிப்பேன் என்கிறார் ரிச்சா பலோட்.


Post your comment





Related News
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
தன்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் லிஸ்ட் வெளியிட தயார் - முன்னணி நடிகை பரபரப்பு பேட்டி.!
இனி எப்போதும் நடிக்கவே மாட்டேன்! சினிமாவை விட்டே வெளியேறிய தனுஷ் பட ஹீரோயின்
தனுஷ், சிம்பு நாயகியான 'தேனில் முக்கிய ஆப்பிள் நடிகை' தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?
வட சென்னையில் நடந்த உண்மை சம்பவங்கள் “ பழைய வண்ணாரப்பேட்டை “
ரிச்சர்ட் நடிக்கும் திகில் படம்
ஷில்பாவுக்கு கட்டி அணைச்சு \'உம்மா\' கொடுத்த கெரேவுடன் பத்மலட்சுமி காதல்!
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் - நடிகை கைது.
நடிப்புத் தொழிலை இன்ப அனுபவமாக மாற்றிக்கொண்ட அற்புத ஹாலிவூட் நடிகர் - ரிச்சர்ட் க்ரிப்பித்ஸ் மரணம்!
திருப்பதி சாமி தரிசனம் செய்ய வந்த நடிகைகள் ஸ்ரேயா, ரிச்சாவை ரசிகர்கள் முற்றுகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions