படகு விபத்தில் சிக்கிய குஞ்சாக்கோ - ரீமா கல்லிங்கல்..!

Bookmark and Share

படகு விபத்தில் சிக்கிய குஞ்சாக்கோ - ரீமா கல்லிங்கல்..!

இருபது வருடங்களுக்கு முன் மலையாளத்தில் மம்முட்டி, பானுப்ரியா நடித்து ஹிட்டான 'அழகிய ராவணன்' படத்தின் கதையை தழுவி தற்போது எடுக்கப்பட்டு வரும் படம் தான் 'சிறகொடிஞ்ச கினாவுகள்'.

இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபன் கிராமத்து டெய்லராகவும், வெளிநாட்டு வாழ் பணக்காரராகவும் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரீமா கல்லிங்கல் நடிக்கிறார்.

சந்தோஷ் விஸ்வநாத் என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் குணச்சித்திர நடிகர் சீனிவாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தின் பாடல் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் உள்ள ஏரி ஒன்றில் படமாக்கப்பட்டது.

குஞ்சாக்கோவும் ரீமாவும் சிறிய படகில் அமர்ந்து பயணிப்பது போன்ற காட்சி. இதற்கான போட் காகிதக்கப்பல் மாடலில் வடிவமைக்கப்பட்டிருந்தது. காட்சி படமாக்கிக்கொண்டிருந்தபோது திடீரென போட் மூழ்க ஆரம்பித்தது.

ஆனால் படப்பிடிப்பு குழுவினரும், பாதுகாவலர்களும் அருகிலேயே மற்றொரு இயந்திரப்படகில் இருந்ததால் உடனடியாக குஞ்சாக்கோவையும் ரீமா கல்லிங்கல்லையும் காப்பாற்றி கரை சேர்த்தனர்.


Post your comment





Related News
பாலியல் குற்றவாளியை பாதுகாக்கிறது மலையாள நடிகர் சங்கத்தை விளாசிய ரீமா கல்லிங்கல்
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
கார்த்தியை வைத்து படம் இயக்க பயந்தேன் - பாண்டிராஜ் ஓபன் டாக்.!
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
கடைக்குட்டி சிங்கத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரிய காட்சி
தாத்தா வயதிலும் ஹீரோவாக நடிக்கிறார்கள்: ரீமா கல்லிங்கல்
தறியுடன் நாவல் “சங்கத்தலைவன்“ என்ற பெயரில் திரைப்படமாகிறது
களத்தூர் கிராமத்தை பாராட்டிய வெற்றிமாறன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions