இவர் யாரென்று தெரிகிறதா...?

Bookmark and Share

இவர் யாரென்று தெரிகிறதா...?

புகைப்படத்தில் இருக்கும் நடிகரை உங்களால் கண்டிப்பாக மறக்க முடியாது. 1973ல் வெளிவந்த பாபி திரைப்படத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ளவர்களையும் மயக்கிய ரிஷி கபூர்.

அதன் பின் எத்தனையோ ஹிந்திப் படங்களில் நடித்தவர். இப்போதும் நடித்துக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவருடைய டிவிட்டரில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு இவர் யாரென்று தெரிகிறதா ? என ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார்.

பலரும் பல பெயரைச் சொல்லியிருக்கிறார்கள். அவர் வேறு யாருமல்ல ரிஷி கபூருடன்  தாமினி  படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த மீனாட்சி சேஷாத்திரி.

தமிழ்ப் பெண்ணான மீனாட்சி சேஷாத்திரியை இன்றைய இளம் ரசிகர்களுக்குக் கண்டிப்பாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 1981ல் மிஸ் இந்தியா பட்டம் வென்ற மீனாட்சி சேஷாத்திரி 1983ல் ஹிந்தித் திரையுலகில் அறிமுகமானார்.

அதன் பின் “ஹீரோ, லவ்வர் பாய், மகா குரு, தூஃபான், காயல், தாமினி, ஹம்ஷகல்” உள்ளிட்ட ஏராளமான ஹிந்திப் படங்களில் நடித்திருக்கிறார். 'மகாகுரு' படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

தமிழில் பாக்யராஜ் நாயகனாக நடித்த,  என் ரத்தத்தின் ரத்தமே படத்திலும், பாலசந்தர் இயக்கத்தில் பிரபு, ரமேஷ் அரவிந்த் நடித்த  டூயட் படத்திலும் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பை விட்டு விட்டு கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்று விட்டார்.

இந்தியாவுக்கு வரும் போதெல்லாம் பழைய திரையுலக நண்பர்களை சந்திப்பது மீனாட்சியின் வழக்கமாம். அப்படி ஒரு நாள் முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் ரிஷிகபூரைப் பார்க்கச் சென்று அவரை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

அவருக்கே முதலில் மீனாட்சியை அடையாளம் காண முடியவில்லையாம். அந்த ஆச்சரியத்தை ரசிகர்களுடனும் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ரிஷி கபூர்.  உண்மையிலேயே மேக்கப் இல்லாத மீனாட்சி சேஷாத்திரியைக் கண்டு பிடிப்பது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது.


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions