ஒரு ட்வீட் போட்டது குத்தமா, இப்படி திட்றாங்க: நடிகர் ரிஷி கபூர் குமுறல்

Bookmark and Share

ஒரு ட்வீட் போட்டது குத்தமா, இப்படி திட்றாங்க: நடிகர் ரிஷி கபூர் குமுறல்

மாட்டு இறைச்சிக்கு மகாராஷ்டிராவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது பற்றி ட்வீட் போட்டு பிரச்சனையில் சிக்கியுள்ளார் ரன்பீர் கபூரின் தந்தையும், நடிகருமான ரிஷி கபூர். ஒரு காலத்தில் பல பெண்களின் தூக்கத்தை கெடுத்தவர் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர்.

நடிகர் ரன்பிர் கபூரின் தந்தை. மகாராஷ்டிரா மாநில அரசு மாட்டு இறைச்சிக்கு தடை விதித்துள்ளதை எதிர்த்து ட்விட்டரில் குரல் கொடுத்துள்ளார். அவர் போட்ட ட்வீட் அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. நான் கோபமாக உள்ளேன்.

உணவை ஏன் மதத்துடன் ஒப்பிடுகிறீர்கள்? நான் மாட்டு இறைச்சி சாப்பிடும் இந்து. அதனால் மாட்டு இறைச்சி சாப்பிடாதவர்களுடன் ஒப்பிடுகையில் என் பக்தி குறைவு என்று அர்த்தமா? சிந்தியுங்கள் என்று ரிஷி கபூர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ரிஷி கபூரின் ட்வீட்டை பார்த்த சிலர் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். பலர் அவரை திட்டித் தீர்த்துவிட்டனர். அவரோடு சேர்த்து அவரது குடும்பத்தையும் திட்டியுள்ளனர்.

தயவு செய்து யாரும் என்னை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் விலங்குகளை கொல்லச் சொல்லவில்லை. அரசியல்வாதிகளின் இரட்டை வேடத்திற்கு நான் எதிரானவன் என்று ரிஷி மீண்டும் ட்வீட் செய்துள்ளார்.

ட்வீட் போட்டு அப்பா பிரச்சனையில் சிக்கியதை அடுத்து அவரது ட்விட்டர் கணக்கை கண்கொத்தி பாம்பாக கவனித்து வருகிறாராம் ரன்பிர் கபூர்.

 


Post your comment





Related News
ஸ்டூடியோவை விற்பதால் கண் கலங்கும் கரீனா கபூர்
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
நிறைவேறிய ஸ்ரீதேவியின் கனவு! குடும்பத்தில் மேலும் ஒரு ஆச்சர்யம்
நான் நடிப்பதை நீ பார்க்க வராதே..! இப்போது வருத்தப்படும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி
சஞ்சு வசூலில் சாதனைக்கு மேல் சாதனை, முழு வசூல் விவரம்
வசூலில் தொடர்ந்து சாதனைகளை தனதாக்கும் சஞ்சு- இப்போது என்ன சாதனை தெரியுமா
இவ்வளவு கவர்ச்சியா? வைரலாகும் நடிகை வாணி கபூர் புகைப்படம்
இறந்து போன பிரபல நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் இந்த நடிப்பது இவர் தானாம்!
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன நடிகை சோனம் கபூர் திருமணம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions