பத்து ஆண்டுகளுக்குப் பின் நடிக்கவரும் ரிச்சா பலோட்!

Bookmark and Share

பத்து ஆண்டுகளுக்குப் பின் நடிக்கவரும் ரிச்சா பலோட்!

ஷாஜகான் படத்தில் கதாநாயகியாக 2001ல் நடித்தவர் ரிச்சா பலோட். தமிழில் பெரிதாக வரவேற்பில்லை. சில படங்கள் மட்டுமே நடித்தார். அதற்குப்பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி பக்கம் போனார் பிறகு இடையில் வந்து உனக்கும் எனக்கும் சம்திங் படத்தில் மட்டும் வந்தார்.

மீண்டும் தமிழில் சுமார் 10 ஆண்டுகளுக்குப்பின் நடிக்கிறார். ஆதி நாயகனாக நடிக்கும் 'யாகாவாராயினும் நாகாக்க' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிக்கிறார். முதல் நாயகியாக டார்லிங் பேய் புகழ் நிக்கி கல்ராணி நடிக்கிறார். புது முகமாகவும் இருக்ககூடாது, புகழ் பெற்றவாராகவும் இருக்ககூடாது, அப்படிப்பட்ட வராகத்தேடியபோது ரிச்சா பலோட் அகப்பட்டார்.

அவரது தோற்றமும் உடல் மொழியும் பிடித்துப் போனதால்தான் தேர்ந்து எடுத்தோம். அவரை ஏன் தேர்ந்தெடுத்தோம் என்பதைப் படம் பார்ப்பவர்கள் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும் என்கிறார் இயக்குநர் சத்ய பிரபாஸ்.

சரியான வாய்ப்பு வந்தால் மட்டும் நடிப்பது இல்லையென்றால் விளம்பரங்கள் மட்டுமே போதும் என்று விளம்பரங்களில் பிஸியாக இருந்தவரை தொடர்பு கொண்டு பேசிய போது முதலில் தவிர்த்தவர் கதையைக் கேட்டுவிட்டு சம்பளம் நிபந்தனைகள் எதுவும் சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டாராம்.

மிதுன் சக்கரவர்த்தியின் மகளாக ரிச்சா பலோட் நடித்துள்ளார். நான் படத்தின் நாயகி அல்ல என்பது எனக்கு தெரியும் இருந்தாலும் முக்கியமான ரோல் கதையை நகர்த்தும் முக்கிய ரோல் இது. எனவே நடித்தேன்.

நான் நடித்த படங்களில் இது சந்தோஷமான திருப்தியான பாத்திரம் அதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் என்று சந்தோஷ சான்றிதழ் கொடுத்து விட்டு விடைபெற்றாராம் ரிச்சா பலோட். இதைச்சொல்லி படக்குழுவே பரவசப்படுகிறது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions