மெட்ராஸ் படம் வாங்கிக்கொடுத்த பெயரை கெடுக்க மாட்டேன்! -ரித்விகா

Bookmark and Share

மெட்ராஸ் படம் வாங்கிக்கொடுத்த பெயரை கெடுக்க மாட்டேன்! -ரித்விகா

பரதேசி படத்தில் டைரக்டர் பாலாவினால் அறிமுகம் செய்யப்பட்டவர் ரித்விகா. அதன்பிறகு நினைத்தது யாரோ படத்தில் நடித்த பிறகு கலையரசனுக்கு ஜோடியாக அவர் நடித்த மெட்ராஸ் படம் ரித்விகாவிற்கு ரொம்ப நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது. அதனால் அதன்பிறகு அவருக்கு கதாநாயகி வாய்ப்புகள்கூட தேடிச்சென்றன.

ஆனால் அவரோ கதாநாயகியாக நடிப்பேன். ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்று கண்டிசனாக சொன்னதை அடுத்து அந்த வாய்ப்பு கள் பின்வாங்கின. அதனால் தொடர்ந்து கேரக்டர் நடிகையாக முடிவெடுத்த ரித்விகா, அழகு குட்டி செல்லம், ஒரு நாள் கூத்து, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, கபாலி என நான்கு படங்களில் நடித்து வந்தார்.

இதில் சமீபத்தில் வெளியான அழகு குட்டி செல்லம் படத்தில் ரித்விகாவின் பெயரை முன்வைத்து பப்ளிசிட்டிகூட செய்யப்பட்டது. இதனால் மெட்ராஸ் ரித்விகா இந்த படத்தில் இன்னும் வெயிட்டான ரோலில் நடித்திருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் சில காட்சிகளில் மட்டுமே வரும் ஒரு சாதாரண வேடத்தில் நடித்திருந்தார்.

இதனால் அபிமானிகள் அதிருப்தி தெரிவிக்க அதிர்ச்சியடைந்தார் ரித்விகா.இருப்பினும், அடுத்தபடியாக நான் நடித்துள்ள ஒருநாள்கூத்து படத்தில் எனக்கு முக்கியமான வேடம். இந்த படத்தில் மியாஜார்ஜ் நாயகி என்றபோதும், நான் ஒரு வித்தியாசமான ரேடியோ ஜாக்கியாக நடித்திருக்கிறேன்.

இந்த ரோல் இளவட்ட ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படியொரு கலகலப்பான வேடம் என்று கூறி வரும் ரித்விகா, அடுத்தபடியாக ரஜினியின் கபாலி, கவுண்டமணியின் எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படங்களில் வெயிட்டான வேடங்களில் நடித்திருக்கிறேன்.

அதனால் மெட்ராஸ் படம் வாங்கிக்கொடுத்த நல்ல பெயரை காப்பாற்றும் வகையில் இந்த படங்கள் அமையும் என்கிறார் ரித்விகா.

 


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரம்! கதறிஅழுத ரித்விகா
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
கபாலியில் ரஜினிக்கு எதிராக குரல் கொடுக்கும் ரித்விகா!
இலங்கை பெண் எனக்கு அழுத்தமான வேடமாக அமைந்தது ரித்விகா!
கதாநாயகி வேடங்களை தவிர்க்கும் யரித்விகா
என்னை ஓரங்கட்டி விடாதீர்கள் - ரித்விகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions