இலங்கை பெண் எனக்கு அழுத்தமான வேடமாக அமைந்தது ரித்விகா!

Bookmark and Share

இலங்கை பெண் எனக்கு அழுத்தமான வேடமாக அமைந்தது ரித்விகா!

மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்தவர் ரித்விகாவின் இயல்பான நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. அதையடுத்து சில படங்களில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் அவரைத் தேடிச்சென்றும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. 

அதற்கு கூறும் விளக்கம் முதலில் ஹோம்லியான கதாநாயகி என்று வருவீர்கள். படப்பிடிப்பு நடக்கும்போது பாடல் காட்சிகளில் மட்டும் லைட்டா கிளாமர் காட்டினால் போதும் என்பீர்கள். இது நமக்கு சரிப்பட்டு வராது. அதனால் கேரக்டர் நடிகையாகவே நான் இருந்து விட்டுபோகிறேன் என்று கூறி விட்டார்” என்றார்.

இந்த நிலையில், தற்போது எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது படத்தில் கவுண்டமணியின் மகளாக நடித்துள்ள ரித்விகா, ஒருநாள்கூத்து படத்தில் ரேடியோ ஜாக்கியாகவும் நடித்துள்ளார்.

மேலும் கபாலியில் சென்னை ஹவுசிங் போர்டில் வசிக்கும் குப்பத்து பெண்ணாக நடித்துள்ளார். அதோடு, அழகு குட்டி செல்லம் என்ற படத்தில் இலங்கை பெண்ணாக நடித்திருக்கிறார்.

இதுபற்றி ரித்விகா கூறுகையில், “தற்போது நான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே ஒவ்வொருவிதமான வேடங்களில் நடிக்கிறேன். ஒரு படத்தில் டீன்ஏஜ் பெண்ணாக, இன்னொரு படத்தில் திருமணமான பெண் என வித்தியாசமான கதாபாத்திரங்கள்.

இதில் அழகு குட்டி செல்லம் படத்தில் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்துள்ள குடும்பப் பாங்கான பெண் வேடத்தி நடித்துள்ளேன். ரொம்ப அழுத்தமான வேடம். இந்த படம் எனக்கு சவாலாக இருந்தது என்றுகூட சொல்லாம்.

அதனால் எப்படி மெட்ராஸ் எனக்கு திருப்புமுனையாக அமைந்ததோடு, அதேபோல் இப்போது நடித்து வரும் படங்கள் ஒவ்வொன்றுமே எனக்கு சினிமாவில் திருப்பத்தை தரும் படங்களாக அமையும்” என்கிறார் ரித்விகா.


Post your comment





Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரம்! கதறிஅழுத ரித்விகா
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
கபாலியில் ரஜினிக்கு எதிராக குரல் கொடுக்கும் ரித்விகா!
மெட்ராஸ் படம் வாங்கிக்கொடுத்த பெயரை கெடுக்க மாட்டேன்! -ரித்விகா
கதாநாயகி வேடங்களை தவிர்க்கும் யரித்விகா
என்னை ஓரங்கட்டி விடாதீர்கள் - ரித்விகா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions