கதாநாயகி வேடங்களை தவிர்க்கும் யரித்விகா

Bookmark and Share

கதாநாயகி வேடங்களை தவிர்க்கும் யரித்விகா

மெட்ராஸ் படத்திற்கு முன்பாகவே பாலாவின் பரதேசி உள்பட சில படங்களில் நடித்திருந்தவர் ரித்விகா. ஆனால் பரதேசி படத்தில்தான் அவர் கவனிக்கப்பட்டார். தொடர்ந்து ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்து தமிழ் சினிமா ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார் ரித்விகா.

அந்த படத்தில் இவரது நடிப்பு இயல்பாக இருந்த்தோடு கலையரசன், ரித்விகா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகள் பேசப்பட்டது.அதன் காரணமாக  மதயானைக்கூட்டம் படத்திற்கு பிறகு மெட்ராஸ் படத்தில் பேசப்பட்டு இப்போது பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் கலையரசன்.

அதேபோல் பரதேசிக்குப்பிறகு மெட்ராஸ் படத்தில் பேசப்படும் நடிகையான ரித்விகாவும் கைவசம் சில படங்களை வைத்திருக்கிறாரெனினும் எந்த படத்திலும் கதாநாயகியாக நடிக்கவில்லை.

குணசித்ர வேடங்களில்தான் நடித்து வருகிறார். மேலும்  கதாநாயகியாக நடிக்க சில படங்கள் அவரை தேடிச்சென்றபோது அவற்றை திருப்பி அனுப்பி விட்டாராம் ரித்விகா. பாடல் காட்சிகளில் கிளாமர் காட்ட வேண்டியதிருக்கும்.

அதோடு குத்துப்பாட்டுக்கும் ஆட வேண்டியதிருக்கும் இவை தனக்கு செட்டாகதென்பதால் தனக்கு கதாநாயகியாக நடிக்க பிடிக்கவில்லை என்று கூறும் ரித்விகா, முக்கியமாக கதாநாயகியாக நடிக்க போதுமான உடல்கட்டு தன்னிடம் இல்லை.

அதனால்தான் அதற்கு நான் ஆசைப்படவில்லை என்கிறார். மேலும், அழுத்தமான பர்பாமென்ஸ் கொடுக்கக்கூடிய குணசித்ர வேடங்களில் நடிப்பதையே தான் விரும்புவதாகவும் கூறுகிறார்.


Post your comment

Related News
குட்டை பாவாடை மட்டும் போட்டால் போதாது, மஹத் தான் வில்லன்: பிக்பாஸ் முதல் சீசன் போட்டியாளர் பளீர்
டாஸ்க் என்ற பெயரில் பிக்பாஸ் வீட்டில் நடந்த கலவரம்! கதறிஅழுத ரித்விகா
நான் என்ன பொம்மையா? ஐஸ்வர்யா-ரித்விகா சண்டை! இரண்டாக பிரிந்த பிக்பாஸ் வீடு
ஏன் தமிழ்பெண் ஜெயிக்க கூடாது? பிக்பாஸ் வீட்டில் பேசிய நடிகை
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொருவரின் உண்மை பின்னணியும் இதுதானாம்! லிஸ்ட் இதோ
கபாலியில் ரஜினிக்கு எதிராக குரல் கொடுக்கும் ரித்விகா!
மெட்ராஸ் படம் வாங்கிக்கொடுத்த பெயரை கெடுக்க மாட்டேன்! -ரித்விகா
இலங்கை பெண் எனக்கு அழுத்தமான வேடமாக அமைந்தது ரித்விகா!
என்னை ஓரங்கட்டி விடாதீர்கள் - ரித்விகா!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions