வீடு தீப்பிடித்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை!

Bookmark and Share

வீடு தீப்பிடித்தது - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நடிகை!

பாரதிராஜா இயக்கிய தாஜ்மஹால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ரியா சென். இவர், மாஜி இந்தி ஹீரோயின் மூன்மூன் சென்னின் மகள் ஆவார். தொடர்ந்து பிரஷாந்த்துடன் குட்லக், அர்ஜூனுடன் அரசாட்சி போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் தமிழில் போதிய வாய்ப்புகள் இல்லை. இதனால் இந்தி திரையுலகிற்கு சென்றார். அங்கு பல படங்களில் நடித்து பிரபலமானார் ரியாசென். ரியாசென், மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனது தாயுடன் வசித்து வருகிறார்.

நேற்று இரவு திடீரென இவர்களது வீடு தீப்பிடித்தது. வீட்டில் தூங்கி கொண்டிருந்த இருவரும் தீ பரவுவதை பார்த்து அலறியடித்து வெளியே வந்தனர். கட்டில், மெத்தை, உள்ளிட்ட பொருட்களிலும் தீப்பிடித்தது.

மேலும் தீ பக்கத்து வீட்டிற்கும் பரவியது. பின்னர் விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஏசியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக ரியா சென்னும் அவரது தாய் மூன்மூன் சென்னும் உயிர் தப்பினர். 


Post your comment





Related News
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
பிறந்தநாளில் புகை பிடிக்கும் காட்சியை வெளியிட்ட ஸ்ரேயா
ஜோதிகாவின் அடுத்த பட அறிவிப்பு
பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா?
பிரியங்கா சோப்ராவுடனான காதல் பற்றி மனம்திறந்த நிக் ஜோனஸ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
பால் விக்கணுமா..? கள் விக்கணுமா..? ; படைப்பாளிகளுக்கு சூர்யா கேள்வி
என்ஜிகே ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு ஏன்? - சூர்யா பேச்சு
மலையாள நடிகை பிரியா வாரியர் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions