பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் குழப்பமடையாதீர்கள்: ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

Bookmark and Share

பிரதமர் மோடியின் திடீர் அறிவிப்பால் குழப்பமடையாதீர்கள்: ஆர்.ஜே.பாலாஜி வேண்டுகோள்

கருப்பு பணத்தை ஒழிக்க 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நேற்று நள்ளிரவு முதல் செல்லாது என்று அதிரடியாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகினாலும், உடனடியாக அறிவித்ததால், சாதாரண பொதுமக்கள் இதனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர்.

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் நடிகரும், சமூக ஆர்வலருமான ஆர்.ஜே.பாலாஜி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசும்போது, நாம் எல்லோரும் பெருமைப்படக்கூடிய அளவுக்கு, இந்திய சுதந்திரத்திற்கு பிறகு ஒரு தைரியமான முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். அவருக்கு மிகப்பெரிய சல்யூட். கருப்பு பணத்தை ஒழிப்பதற்கு இதைவிட முக்கியமான, திடகாத்திரமான முடிவு எடுக்கமுடியுமா? என்று தெரியவில்லை. 

அதேநேரத்தில், சாதாரணமாக இருக்கிற பொதுமக்கள் இந்த அறிவிப்பால் பெரும் பதட்டமடைந்திருக்கிறார்கள். அவர்கள் இதற்காக வங்கி ஏடிஎம்களில் கூட்டம் கூட்டமாக நின்று பணத்தை எடுத்து வருகிறார்கள். நாளை ஒருநாள்தான் வங்கியும், ஏடிஎம் மெஷின்களும் செயல்படாது. நாளை மறுநாளே உங்களுடைய பணத்தை வங்கிகளில் கொண்டு செலுத்தினால் உங்களுக்கு பணத்தை மாற்றி கொடுப்பார்கள். அதற்காக இப்போதே பதட்டம் அடையாதீர்கள்.

இப்போதைக்கு உங்கள் கையில் 500-1000 ரூபாய் நோட்டுக்களை தவிர வேறு இல்லையென்றால், பக்கத்தில் இருப்பவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கிக் கொள்ளுங்கள். பக்கத்தில் இருப்பவர்களும் உங்களிடம் இருந்தால் அவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். இந்த அறிவிப்பால் எந்த குழப்பமும் அடையாதீர்கள். நமக்கு ஒன்றும் ஆகாது. 
கடைக்காரர்கள், பெட்ரோல் பாங்குகாரர்கள் இந்த நோட்டுக்கள் எத்தனை நாள் வரை செல்லும் என்று சொல்லியிருக்கிறார்களோ, அதுவரை வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இன்னும் கொஞ்சம் பதற்றத்தை கொடுக்கும். 

இந்த வீடியோவின் முக்கிய நோக்கமே, நம்மை சந்தோஷப்படுத்த வேண்டும், பெருமைப்படுத்த வேண்டும், இந்த அறிவிப்புக்கு பிறகு கருப்பு பணம் என்பது இந்தியாவில் இருக்காது என்று நாம் தைரியமாக இருப்பதற்காக எடுத்த முடிவு. இதனால், நாம் என்னாவோம் என்று குழப்பத்துடன் பயப்படுவதற்காக எடுத்த முடிவு அல்ல. இது சந்தோஷமான விஷயம்தான். இந்தியா 2020-ல் வல்லரசாகும் என்பதற்கு முக்கியமான முதல் படியாக இதை ஏற்றுக் கொள்வோம். ஜெய்ஹிந்த் என்று பேசியுள்ளார்.
அந்த வீடியோ பார்க்க... 


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
எல்லார் முன்னாடியும் இப்படி சொல்லாதீங்க.. பாலாஜி சொன்ன ஒரு வார்த்தையால் கோபமாகி சண்டை போட்ட சென்ட்ராயன்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
மாரி 2 படத்தில் இணைந்த பிரபலம், எகிறும் எதிர்பார்ப்பு.!
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
நான் கொடுத்த முத்தம் அழிந்துவிடும்..அதை செய்யாதீங்க! பிக்பாஸ் மிட்நைட் மசாலா
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
மஹத்திற்கு பிக்பாஸ் கொடுத்த சாப்பாடு! கண்கலங்கிய போட்டியாளர்..








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions