+2 ஃபெயில், 21 வயதில் கல்யாணம்; யாருக்கும் தெரியாத RJ பாலாஜியின் இன்னொரு பக்கம்!

Bookmark and Share

+2 ஃபெயில், 21 வயதில் கல்யாணம்; யாருக்கும் தெரியாத RJ பாலாஜியின் இன்னொரு பக்கம்!

சந்தானம் ஹீரோ ஆனபின் தமிழ் சினிமாவில் காமெடியன்களுக்கு நிறைய பஞ்சம். சூரி ஓரளவு இதை பூர்த்தி செய்தாலும் டிரெண்டி ஹீரோவுக்கு நண்பராக அவரை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிப்பார்த்தால் சந்தானம் விட்டுப்போன இடத்தைப் பிடிக்க தற்போது ஃபுல் ஃபார்மில் இருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி.ரேடியோ ஜாக்கி, சமூக ஆர்வலர் என இன்ச் பை இன்ச்சாக நகர்ந்து தற்போது மணிரத்னம், ஏ.ஆர்.முருகதாஸ் பட காமெடியன் அந்தஸ்தைப் பெற ஆர்.ஜே.பாலாஜிக்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது.

ஆம்இந்த ஆண்டோடு ரேடியோ ஜாக்கியாக ஆர்.ஜே.பாலாஜிக்கு வயது 10.“சகட்டுமேனிக்கு எல்லோரையும் கலாய்க்கிறார்”, “கவுன்ட்டர் ஓகே காமெடி பெருசா இல்ல” போன்ற பல விமர்சனங்கள் இவர்மீது இருந்தாலும் ஆர்.ஜே.பாலாஜியின் “மயிலாப்பூர் டூ மணிரத்னம்” பயணம் எல்லோருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷன்தான்.+2-வில் ஃபெயில் ஆன இவர் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகே கல்லூரியில் சேர்ந்தார். அங்கு தன்னுடன் படித்த தோழியை இறுதி ஆண்டில் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அப்போது பாலாஜிக்கு வயது 21. பின் ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கியவர், அவர் செய்யும் வேலையில் சூப்பர்ஸ்டாராக ஜொலிக்கத் தொடங்கினார்.அதன்பின் தீயா வேலை செய்யணும் குமாரு,

வடகறி என ஒருசில படங்களில் தலைகாட்டினாலும் ‘நானும் ரௌடிதான்’ இவருக்கு தமிழ் சினிமாவில் சிவப்பு கம்பள வரவேற்பை கொடுத்தது. இன்னும் சொல்லப்போனால் கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம் என இன்னைக்கு இவர் பெயர் சொல்லி பிசினஸ் நடக்கும் அளவுக்கு இவரது வளர்ச்சி அனைவரையும் திரும்பி பார்க்கவைத்துள்ளது.

 


Post your comment

Related News
என்னை மாமா என்று சமந்தா அழைப்பது மகிழ்ச்சி: நாகர்ஜுனா
மகாபாரதக் கதையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாகர்ஜுனாவுக்கு அழைப்பு
ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி RJ பாலாஜி கருத்து
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது போலீஸில் புகார் அளித்த அவரது மனைவி
இதை எல்லாம் பார்க்க எங்க அம்மா இல்லையே: வாரிசு நடிகர் கவலை
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் செய்த ஒரே தவறு இதுதான்! நடிகர் RJ பாலாஜி
இளையதளபதி விஜய்யையும் தாண்டி அட்லீ இயக்க விரும்பும் அந்த ஒரு நடிகர் யார் தெரியுமா?
ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்காக இணைந்த 150 சினிமா பிரபலங்கள்- சினிமாவில் புதுவித முயற்சி
ஆக்ஷன் கிங் அர்ஜுனின் திரைப்பயணத்தில் புதிய மைல்கல்
பாகுபலி 2 டவுன்லோட் பன்னி பாத்தா கம்ப்யூட்டரே காரி துப்பும்- இப்படி யார் திட்டுவது தெரியுமா?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions