சென்னை தத்தளிப்பதை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி 'பொளேர்'

Bookmark and Share

சென்னை தத்தளிப்பதை கண்டுகொள்ளாத தேசிய ஊடகங்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி 'பொளேர்'

உங்களுக்கு எல்லாம் சென்னை, தமிழகம் எப்படி இருக்கும் என்றே தெரியாது என்று தேசிய ஊடகங்கள் பற்றி ஆர்.ஜே. பாலாஜி இந்தியா டுடே கன்சல்டிங் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாயிடம் தெரிவித்தார்.

சென்னை வெள்ளத்தில் தத்தளித்த போது தேசிய ஊடகங்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக நாட்டில் சகிப்பத்தன்மை இல்லாதது பற்றி பேசிக் கொண்டிருந்தன. இந்தியா டுடே குழும கன்சல்டிங் ஆசிரியர் ராஜ்தீப் சர்தேசாய் மட்டும் சென்னை நிலவரம் பற்றி அவ்வப்போடு ட்வீட் செய்ததுடன், வீடியோ பிளாக் வெளியிட்டார்.

மேலும் சென்னை மழையை தேசிய ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை தொடர்ந்து கண்டித்தும் வந்தார். இந்நிலையில் அவர் சென்னை வந்து மக்களை பேட்டி எடுத்தார்.

இந்தியாவில் சகிப்புத்தன்மை இல்லை என்று கூறுவதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அப்படி எல்லாம் இல்லை என்று ஒரு பெண் தெரிவித்தார்.

நவம்பர் மாத துவக்கத்தில் இருந்து சென்னையில் கனமழை பெய்தது. ஆனால் தேசிய ஊடகங்கள் சகிப்புத்தன்மை இன்மை பற்றி விவாதித்துக் கொண்டிருந்ததை ஒப்புக் கொள்கிறேன் என்றார் ராஜ்தீப்.

உங்களில் பலருக்கு ஆர்.ஜே.பாலாஜி யார் என்று தெரியாது. அதே போன்று தான் சென்னை, தமிழகம் எப்படி இருக்கும் என்பதும் உங்களில் பலருக்கு தெரியாது என்றார் பாலாஜி.


Post your comment





Related News
அர்ஜுன் மீதான புகாரால் ஸ்ருதியின் ரகசியம் வெளியானது
பாலியல் புகார் கூறிய நடிகைக்கு எதிராக ரூ.5 கோடி கேட்டு அர்ஜூன் வழக்கு
நடிகர் அர்ஜூனுக்கு தெலுங்கு நடிகை சோனி செரிஸ்டா ஆதரவு!
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions