பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை: ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்

Bookmark and Share

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை: ஆர்.ஜே. பாலாஜி வேண்டுகோள்

நடிகர், நடிகைகள் பலரும் களத்தில் இறங்கி பல்வேறு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் குறிப்பாக, சித்தார்த் மற்றும் ஆர்.ஜே.பாலாஜி இருவரும் இணைந்து சென்னை மைக்ரோ என்ற பெயரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை களத்தில் இறங்கி வழங்கி வருகின்றனர். 

சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்துக்காக தொடங்கப்பட்ட சென்னை மைக்ரோ இப்போது இயக்கமாக செயல்படத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது: 

நானும் சித்தார்த்தும் சேர்ந்து கடந்த 5 நாட்களாக சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களால் எந்த உதவி செய்யமுடியுமோ அதை செய்துகொடுத்து வருகிறோம். ஏனென்றால், இதையெல்லாம் வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டிருக்க எங்களால் முடியவில்லை. அதனால், ரோட்டில் இறங்கி வேலை செய்ய முடிவு செய்தோம். 

ஆனால், இத்தனை பேரை அது ஈர்க்கும். இவ்வளவு இளைஞர்கள் எங்களுக்கு உதவி செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. இது ஒவ்வொரு நாளும் பெரிய விஷயமாக மாறி, தினமும் 500 முதல் 1000 இளைஞர்கள் எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள். எங்களால் என்ன முடியுமோ அதையெல்லாம் செய்தோம். 

ஆனால், இதுவெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக என்ன தேவையோ, அதைத்தான் கொடுத்தோம். இதன்பிறகு, அவர்களது வாழ்க்கையில் இனிமேல் என்னவெல்லாம் தேவைப்படுமோ அதையெல்லாம் கொடுக்கிற விஷயமாக மாறவேண்டும். பிஸ்கட் பாக்கெட், பால் பாக்கெட், சாப்பாடு கொடுப்பதை நேற்றோடு நிறுத்திக் கொள்கிறோம். 

இதன்பிறகு, அவர்களுடைய வாழ்க்கைக்கு என்ன தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் கொடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக இந்த நேரத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம். அவர்களுக்கு எக்கச்சக்கமான விஷயங்கள் தேவையாக இருக்கிறது. நிறைய விஷயங்களை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. 

நிறைய பேர் இருப்பதற்குகூட இடம் இல்லாமல் இருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தால் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான நோய்கள் பரவ வாய்ப்பு இருக்கிறது. இதற்கான மருந்து, மாத்திரைகளுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது, நான், சித்தார்த் மற்றும் 500, 1000 இளைஞர்கள் கொண்டு செய்யக்கூடிய விஷயம் கிடையாது. இதற்கு பொதுமக்களாகிய உங்களுடைய ஒத்துழைப்பு வேண்டும். இதுவரை நிவாரண பொருட்கள் வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் என்று கூறினார். 

ஆர்.ஜே.பாலாஜியும், சித்தார்த்தும் தற்போது கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
இந்த விஜய்க்கு ஒரே நாளில் நடந்த எதிர்பாராத அதிர்ச்சி! ரசிகர், ரசிகைகள் சோகம்
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
அஜித் வழியை அப்படியே பின்பற்றிய ரசிகர்கள்! மொத்த பேரையும் திரும்பி பார்க்க வைத்த அதிசயம்
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நயன்தாரா படம் பற்றிய வதந்தி! இயக்குனர் விளக்கம்
நயன்தாராவிற்கு இவர் ஜோடியா? ஷாக் ஆன ரசிகர்கள்
"பயப்படாம கட்டிப்புடி " ; 'X வீடியோஸ் நடிகருக்கு ஊக்கம் கொடுத்த லட்சுமிராய்..
நாங்கள் அடிமைகளா? பிக்பாஸ் வீட்டில் ஆண்கள் - பெண்கள் மோதல்
கொலைகாரனுடன் இணைந்த அர்ஜுன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions