பிரபல தொலைக்காட்சி நிரூபருக்கு பதிலடி கொடுத்த ஆர் ஜே பாலாஜி

Bookmark and Share

பிரபல தொலைக்காட்சி நிரூபருக்கு பதிலடி கொடுத்த ஆர் ஜே பாலாஜி

ஆர் ஜே பாலாஜி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி நடிகர். இவர் சமூக அக்கறை கொண்ட பல விஷயங்களில் தன்னை ஈடுப்படுத்தி வருகின்றார்.

இந்நிலையில் தமிழகத்தை சார்ந்த விவசாயிகள் டெல்லியில் 29 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுக்குறித்து ஒரு கலந்தாய்வில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பாலாஜி கலந்துக்கொண்டார்.

இதில் இவரிடம் தமிழக விவசாயிகள் என நிரூபர் கூற ‘சார் மன்னிக்கவும், அவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான்.

ஆனால், அஷ்வின் கிரிக்கெட்டில் சாதனை படைக்கும் போது மட்டும் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறீர்கள்.

அப்போது அவர் தமிழனாக தெரியவில்லை, இவர்களை இந்திய விவசாயிகளாக பாருங்கள், அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்’ என கூறியுள்ளார்.

 


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions