உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.

Bookmark and Share

உலகம் உள்ள வரை வாலியின் தமிழ் வாழும் - ரஜினி.

தமிழ்த்திரை உலகில் எந்த வகை பாடலையும் எழுத முடியும் என்பதை பல தடவை நிரூபித்தவர் வாலி. அவர் தன்னம்பிக்கை தரும் பாடல்கள், காதல் பாடல்கள் மட்டுமே எழுதவில்லை. ஆன்மீக பாடல்கள் எழுதுவதிலும் அவர் தனித்துவம் பெற்றிருந்தார்.


அன்றைய நடிகர் மக்கள் திலகம் எம்.ஜீ.ஆர் தொடங்கி இன்றைய இளம் நடிகர் சிவ கார்த்திகேயன் வரை அனைவருக்கும்,அனத்துவிதமான  ரசனை உள்ளங்களுக்கும் தெவிட்டாத கவியை தந்தவர் என்றால் அது கவிஞர் வாலியால் மட்டுமே முடியும்.

இதனால் தான் உலகம் உள்ளவரை கவிஞர் வாலியின் தமிழ் வாழும் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்.


தமிழ் சினிமாவில் பன்முகத் திறமைகளாலும் பண்பட்ட குணத்தாலும் கோலோச்சிய கவிஞர் வாலியின் மரணம், எல்லோரையும் உலுக்கிப் போட்டுள்ளது.


இலக்கியம், திரையுலகம், அரசியல் என அனைத்துத் தரப்பிலிருந்தும் ஆளுமைகள் வாலிக்கு நேரில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கவிஞர் வாலி அதிகம் பாட்டெழுதிய நாயகர்களில் ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி.


ரஜினியின் இயல்பை மனதில் வைத்து அவர் படிக்காதவன் படத்தில் எழுதிய ராஜாவுக்கு ராஜா நான்டா... பாடல் ரஜினிக்கு எப்போதும் விருப்பமான பாடல்.


ரஜினிக்கு சிவாஜி - தி பாஸ் வரை தொடர்ந்து பாடல் எழுதிய வாலி, அடுத்து வெளியாகவிருக்கும் கோச்சடையான் படத்திலும் பாடல் எழுதியுள்ளார்.


மறைந்த கவிஞர் வாலிக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினி. வாலி குறித்து அவர் கூறுகையில்,
Lyricist Vaali Funeral Photos - Image 2 of 24

"அவரைப் பற்றிச் சொல்ல வார்த்தைகள் வரவில்லை. உயர்ந்த மனிதர். அருமையான கவிஞர். இந்த உலகம் உள்ள வரை அவர் தமிழும் புகழும் வாழும்," என்றார்.


Post your comment





Related News
வருகிற 14, 21-ந்தேதிகளில் 20 புதிய படங்கள் வெளியாகிறது
விஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு
புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?
தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்
தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு
2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்
உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!
தளபதி 63 - விஜய்க்கு வில்லனாகும் இந்தி நடிகர்
அழகாக படம் பிடித்த இடங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன - சீமத்துரை படக்குழு வேதனை








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions