மீண்டும் வில்லன் வேடத்துக்கு திரும்பிய ஆர்.கே

Bookmark and Share

மீண்டும் வில்லன் வேடத்துக்கு திரும்பிய ஆர்.கே

பிரபல தொழிலதிபர் ஆர்.கே. தனது வியாபாரத்தில் சில நூறு கோடிகளை சம்பாதித்தவர் அதில் பெரும் தொகையை சினிமாவில் முதலீடு செய்தார். அதாவது விஜய் நடித்த சுறா, பாலா தயாரித்த பரதேசி உட்பட பல பெரிய படங்களுக்கு பைனான்ஸ் செய்தார்.

இன்னொரு பக்கம், திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலையைக்காட்டி, வில்லனாக நடித்து மெல்ல கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் நடித்த எல்லாம் அவன் செயல் படம் ஆர்கேவுக்கு ஓரளவு பெயர்வாங்கிக்கொடுத்தது.

அதன் பிறகு அவர் ஹீரோவாக நடித்த அழகர்மலை படு தோல்வியடைந்தது. அதன் பிறகு பரதேசி, ஜில்லா படங்களில் நடித்தவர் தற்போது என் வழி தனி வழி என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்தப் படம் நாளை வெளியாகிறது.

இப்படத்தைத்தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ் என்ற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிக்க, சில தினங்களுக்கு முன் தொடங்கப்பட்ட புதிய படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஆர்.கே. அரசியல்வாதி வேடம் இவருக்கு. மற்றொரு வில்லனாக ஆனந்தராஜ் நடிக்கிறார்.


Post your comment





Related News
ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் - சரண் இயக்குகிறார்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
பிரான்மலை படத்தின் ட்ரைலரை வெளியிட்ட மதன் கார்க்கி!
கூடுதல் கட்டண விவகாரம்: சர்கார் பட வசூல் விவரங்களை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions